»   »  சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் நடிகர் சங்கத்திலிருந்து நிரந்தர நீக்கம்

சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் நடிகர் சங்கத்திலிருந்து நிரந்தர நீக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுவில் இருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் நிரந்தரமாக நீக்கப்பட்டனர். 3 பேரையும் நீக்க பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை சங்க பொதுச் செயலாளர் விஷால் அறிவித்தார்.

Sarath Kumar, Radharavi and Vagai Chandrasekhar dismissed from Nadigar Sangam

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு கூட்டம் சென்னை தி.நகரில் மோதல், தள்ளுமுள்ளு பரபரப்புடன் நடைபெற்றது. நடிகர்சங்க பொதுக்குழு கூட்டத்தில் மூத்த நடிகர்களின் பெயரில் நடிகர்களுக்கு விருது வழங்கப்பட்டது. வெண்ணிற ஆடை மூர்த்தி, விணுசக்கரவர்த்தி, சரோஜாதேவி உள்ளிட்ட 10 பேருக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் சங்க உறுப்பினர்களின் விவர பட்டியல் தலைவர் நாசரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Sarath Kumar, Radharavi and Vagai Chandrasekhar dismissed from Nadigar Sangam

நடிகர் சங்கத்தில் முந்தைய நிர்வாகம் செய்த முறைகேடுகள் பல ஆவணங்கள் மற்றும் விவரங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது. முறைகேடுகளின் விசாரணை முடிந்து உண்மை தெரியும் வரை முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகிய மூவரையும் தற்காலிகமாக நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி இருக்கிறோம் என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சங்கம் கூறியது.

Sarath Kumar, Radharavi and Vagai Chandrasekhar dismissed from Nadigar Sangam

நடிகர் சங்க விவகாரத்தில் என்னை, ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை நீக்கியதாக பத்திரிகையில் வந்த செய்தியைத்தான் தெரிந்துகொண்டேன். முறைப்படி நீக்கியதற்கான எந்தக் கடிதமும் இதுவரை எனக்கு வரவில்லை. விளக்கம் கேட்டும் எந்தக் கடிதமும் அனுப்பப்படவில்லை என்று சரத்குமார் தெரிவித்தார். நடிகர் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கலந்து கொள்ள அனுமதி கோரியும் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுவில் இருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் நிரந்தரமாக நீக்கப்பட்டனர். 3 பேரையும் நீக்க பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நடிகரும் சங்க பொதுச்செயலாளருமான விஷால் கூறியுள்ளார்.

English summary
Nadigar Sangam's annual GB meeting has approved the dismissal of former functionaries Sarath Kumar, Radhar Ravi and Vagai Chandrasekhar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil