»   »  ஜப்பானிய மொழியிலும் சண்டமாருதம் - சரத்குமார் பேட்டி

ஜப்பானிய மொழியிலும் சண்டமாருதம் - சரத்குமார் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சண்டமாருதம் படத்தை ஜப்பானிய மொழியிலும் வெளியிடப் போவதாக நடிகர் சரத்குமார் கூறினார்.

ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் - ஓவியா, மீரா நந்தன் நடித்துள்ள சண்டமாருதம் படம் இன்று வெளியாகியுள்ளது.

பேட்டி

பேட்டி

படம் வெளியாவதையொட்டி சரத்குமார் அளித்த பேட்டியில், "சாண்டமாருதம் பிரம்மாண்ட படமாக தயாராகி உள்ளது.

இதில் சூர்யா என்ற பெயரில் என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாகவும், சர்வேஸ்வரன் என்ற பெயரில் பயங்கர தாதாவாகவும் இரு வேடங்களில் நடித்துள்ளேன்.

கமர்ஷியல்

கமர்ஷியல்

தாதா வேடம் வித்தியாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச குற்றச் செயலில் சம்பந்தப்பட்டதுபோல் அந்த கேரக்டர் இருக்கும். முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக வந்துள்ளது. சண்டமாருதம் படத்தை உலக அளவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் வருகிறது.

தமிழகத்தில் 300 திரையரங்குகள்

தமிழகத்தில் 300 திரையரங்குகள்

தமிழகம் முழுவதும் 300 -க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது. மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் இருக்கும் ‘மல்டிபிளக்ஸ்' திரையரங்குகளிலும் இப்படம் வெளியாகிறது.

ஜப்பானிய மொழியில்

ஜப்பானிய மொழியில்

ஜப்பானிய மொழி டைட்டிலுடன் ஜப்பான் நாட்டில் வெளியிடுகிறோம். ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இது இருக்கும்.

தமிழகம் தவிர பிற மாநிலங்களிலும் அதிக எண்ணிக்கை தியேட்டர்களில் முதல் முறையாக எனது படம் வெளியாகிறது," என்றார்.

English summary
Sarath Kumar is releasing his Sandamaruthan in Japanese language in Japan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil