Kombu Seevi Teaser: பாகிஸ்தான் மீது குண்டு போட கை கோர்த்த சரத்குமாரும் விஜயகாந்த் மகனும்.. கொம்பு சீவி டீசர்
சென்னை: இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார் மற்றும் மறைந்த கேப்டன் விஜயகாந்த் மகனான சண்முக பாண்டியன் இணைந்து நடித்துள்ள படம் கொம்பு சீவி. இந்த படத்தின் டீசர் இன்று அதாவது அக்டோபர் 11ஆம் தேதி படக்குழு தரப்பில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதற்கு காரணம் பொன்ராமின் வழக்கமான நகைச்சுவை தான் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். டீசர் எப்படி உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
மொத்தம், 1 நிமிடம் 33 நொடிகளுக்கு இந்த டீசர் வெளியாகி உள்ளது. சரத்குமார் ரொக்கப் புலி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் சண்முக பாண்டியன் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சரண்டர் ஆனவர்களை நாங்கள் அடித்ததில்லை, சண்டைக்கு வந்தவர்களை நாங்கள் சரண்டர் ஆக விட்டதில்லை என்ற அடாவடி டயலாக் உடன் தொடங்குகிறது டீசர்.

மேலும் சரத்குமாரும் சண்முக பாண்டியனும் தாங்கள் இருவரும் வெடிகுண்டு தயாரித்ததாகவும், அதை பாகிஸ்தான் மீது வீசுவதற்காக தான் தயாரித்தோம் என்றும் கூறுகிறார்கள். இது மட்டும் இல்லாமல் இந்த குண்டை பாகிஸ்தான் மீது போடத்தான் தயாரித்தோம் என்றும் கூறுகிறார்கள். தொடர்ந்து இன்றைக்கு காஷ்மீர் மீது குண்டு போட்டவர்கள் நாளை காமக்கா பட்டியில் குண்டு போட்டால் என்னங்க செய்யறது என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
கலகலப்பான டீசர்: டீசரில் வரும் அடிதடிக் காட்சிகளைப் பார்க்கும்போது, படத்தில் ஆக்ஷன் காட்சிகள் மிகவும் வலுவாக இருக்கும் என்பது உறுதியாகத் தெரிகிறது. மேலும் , கதைக்களம் தேனி பகுதியைக் கொண்டது என்பதால், படத்தை தேனி மாவட்டத்தின் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் எடுத்துள்ளார்கள் என்பது தெரிகிறது. படம் முழுக்க ஜனரஞ்சகமான நகைச்சுவை டயலாக்குகள் அதிகம் இருக்கும் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. டீசர் முழுக்கவும் திருவிழாவுக்கு இறங்கி குத்துவது போல இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.

ரசிகர்கள் கமெண்ட்ஸ்: டீசரைப் பார்த்த ரசிகர்கள் சிலர், " மன்னிப்பு.. தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை என்று டயலாக் பேசி ரமணா படத்தில் தெறிக்க விட்ட கேப்டன் விஜயகாந்த் மகனுக்கு மன்னிப்பு கேட்கச் சொல்லிக் கொடுக்கிறார் சரத்குமார்" என்று பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல், " சரத்குமார் மற்றும் சண்முக பாண்டியனின் காம்பினேஷன் மிகவும் சிறப்பாக உள்ளது என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். இயக்குநர் பொன்ராம் படத்தின் டீசரை தரமாக இறக்கி உள்ளார் என்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











