»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியிருந்த நடிகர் சரத்குமார் தனியார் டி.வி.யில் நடத்தியகோடீஸ்வரன் நிகழ்ச்சி மூலம் சம்பாதித்த ரூ 25 லட்சத்தை ஆர்.பி.எப். நிதி நிறுவனத்திடம்செலுத்தினார்.

சென்னையில் பிரபலமாக செயல்பட்டு வந்த நிதி நிறுவனம் ஆர்.பி.எப். நிதி நிறுவனம்.இது திடீர் என மூடப்பட்டது. இதில் பல திரைப்பட பிரமுகர்களும், அமைச்சர் முத்துச்சாமிஉள்ளிட்ட பலர் கடன் வாங்கியுள்ளனர். அவர்கள் பணம் திரும்ப செலுத்தாததும் நிதிநிறுவனம் நஷ்டத்திற்குட்பட்டு மூடப்பட்டதற்கு காரணம் என தெரியவந்தது.

நிதிநிறுவனம் மூடப்பட்டதால் நிதி நிறுவன இயக்குநர்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து கடன் வாங்கியவர்கள் பட்டியல் பெறப்பட்டது.

பணம் கட்டாதவர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது.நடிகர் சரத்குமார் இந்த நிதிநிறுவனத்திடமிருந்து ரூ 55 லட்சம் கடன் வாங்கியுள்ளதுதெரியவந்தது. அவர் ரூ 10 லட்சம் மட்டுமே திரும்ப கட்டியிருந்தார். தற்போது வட்டியுடன்சேர்த்து அவர் ரூ 4 கோடியே 11 லட்சம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ்அனுப்பப்பட்டது.

ஆனால் சரத்குமார் வட்டி அதிகமாக உள்ளது குறைக்க வேண்டும் என்றார். இதற்கு நிதிநிறுவனம் மறுத்து விட்டது. இந் நிலையில் தனியார் தொலைக்காட்சியில் கோடீஸ்வரன்நிகழ்ச்சி நடத்துவதற்கு சரத்குமார் நியமிக்கப்பட்டார். அவர் அந்த நிகழ்ச்சி மூலம்சம்பாதிக்கும் பணத்தை பெற்றுக்கொள்ளக்கூடாது அதை நிதிநிறுவனத்திடம் செலுத்தவேண்டும் என முதலீட்டாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்தநீதிமன்றம் சரத்குமாருக்கு விளக்கம் கேடடு நோட்டீஸ் அனுப்பியது.

சரத்குமார் வட்டியை குறைத்தால் பணத்தை திரும்ப தருவதாக கூறினார். இது குறித்துஆர்.பி.எப். நிதி நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு சரத்குமார் ரூ 2 கோடியே70 லட்சம் திரும்ப கட்ட வேண்டும் என முடிவு செய்யபப்ட்டது.

இந்த தொகையை 5 தவணைகளில் செலுத்துவதாக சரத்குமார் நீதிமன்றத்தில் உறுதிஅளித்தார். முதல் தவணையாக ரூ 25லட்சம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். அதன்படி ரூ 25 லட்சத்தை உயர் நீதிமன்றத்தில் செலுத்தினார்.

Read more about: chennai, cinema, loan, refund, sarathkumar, tamilnadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil