»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் நடிகர் சரத்குமார் வீடு மீது வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத மர்மக் கும்பல் தாக்குதல்நடத்தியது.

இந்தத் தாக்குதலில் சரத்குமார் வீட்டு ஜன்னல் கதவுகள் உடைந்து நொறுங்கின.

முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 29 ம் தேதி நள்ளிரவு சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு அடித்துஇழுத்துச் செல்லப்பட்டார். இதற்கு நடிகர் சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அடையாளம் தெரியாத மர்மக்கும்பல் ஒன்று, வியாழக்கிழமை நடிகர் சரத்குமார் வீடு மீது தாக்குதல்நடத்தியது. அக்கும்பல் கற்களையும், செங்கற்களையும் வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் அவர் வீட்டு ஜன்னல்,கதவுகள் உடைந்து நொறுங்கின.

சம்பவம் நடந்த போது சரத்குமார் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்றிருந்தார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகை விஜயசாந்தி வீட்டிலும், வியாழக்கிழமை இரவு நடிகர் எஸ்.எஸ்.சந்திரன்வீட்டிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதலில் தீவிரமான அதிமுக தொண்டராக இருந்து இரட்டை இலை எம்பிராய்ட்ரி போட்ட சட்டையெல்லாம்அணிந்து வந்தவர் சரத் குமார்.

பின்னர் திமுகவுக்குத் தாவினார். எம்.பி. சீட் கிடைத்தது, ஆனால், தேர்தலில் தோற்றார். தொடர்ந்து திமுகவில் தான்உள்ளார். திமுகவின் பிரச்சார பீரங்கியான நடிகை ராதிகாவை திடீர் திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து தான் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

அதிமுகவிலிருந்து திமுகவவுக்கு தாவிய இவர் வீட்டிலும் திமுகவிலிருந்து அதிமுகவுக்கு தாவிய எஸ்.எஸ். சந்திரன்வீட்டிலும் தாக்குதல் நடந்துள்ளது.

அதிமுக-திமுக பிரச்சனையில் சம்பந்தமேயில்லாமல் பா.ஜ.கவில் உள்ள விஜயசாந்தி வீட்டிலும் பெட்ரோல் குண்டுவிழுந்துள்ளது.

கோடம்பாக்கம் கலங்குகிறது!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil