»   »  சரத்குமாருக்கு மலையாளப் படத்தில் வாய்ப்பு இப்படித்தான் கிடைத்ததா?

சரத்குமாருக்கு மலையாளப் படத்தில் வாய்ப்பு இப்படித்தான் கிடைத்ததா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாளத்தில் நிவின் பாலி நடிக்கும் 'காயம்குளம் கொச்சுண்ணி' படத்தில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் நடிக்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 19-ம் நூற்றாண்டின் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப்படத்தை ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்குகிறார்.

19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப்படம் எனக் கூறப்பட்டுள்ளது. அவர் செல்வந்தர்களிடம் நகை, பணத்தை கைப்பற்றி ஏழைகளுக்குக் கொடுத்தார் எனவும் சொல்லப்படுகிறது. இந்த வரலாற்றுப் படத்திற்காக நிவின்பாலி, இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார்.

Sarathkumar acting in new Malayalam movie

இந்தப் படத்தில் நடிகை அமலாபால் நாயகியாக நடிக்கிறார். நிவின் பாலியும் அமலாபாலும் இணைந்து நடிப்பது இது இரண்டாவது முறையாகும். இருவரும் ஏற்கெனவே 2015-ல் வெளியான 'மிலி' படத்திலும் நடித்திருந்தனர்.

இந்தப் படத்திற்கு பாபி மற்றும் சஞ்சய் ஆகியோர் திரைக்கதை எழுதுகின்றனர். இவர்கள் தமிழில் வெளிவந்த 'சென்னையில் ஒரு நாள்' படத்திற்கு ஸ்க்ரிப்ட் எழுதியவர்கள் ஆவர். அந்தப் படத்தில் லீட் ரோலில் நடித்த சரத்குமார் இந்தப் படத்திலும் நடிக்கவிருக்கிறார். ஆக, சரத்குமாருக்கு காயம்குளம் கொச்சுண்ணி படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவர்கள் மூலமாகவே கிடைத்திருக்கலாம்.

English summary
Sarathkumar acting in new Malayalam movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil