»   »  "பூச்சி"யைப் பிடிச்சு உள்ளே போடுங்க.. பொங்கி எழுந்த சரத்குமார்!

"பூச்சி"யைப் பிடிச்சு உள்ளே போடுங்க.. பொங்கி எழுந்த சரத்குமார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எனது பெயருக்கும், புகழுக்கும் தொடர்ந்து களங்கம் விளைவித்து வரும் பூச்சி முருகன் மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரத்குமார் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இன்று காலை நடிகர் சங்கத்தின் சார்பில் பூச்சிமுருகன் சென்னை கமிஷனரை நேரில் சந்தித்து சரத்குமார் மீது ஊழல் புகார் ஒன்றை அளித்தார்.

Sarathkumar Against Complaint for Poochi Murugan

இதற்கு நடிகர் சரத்குமார் சட்டரீதியாக இந்தப் புகாரை எதிர்கொள்வேன் என்று தெரிவித்திருந்தார். மேலும் விஷால் தரப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிலுக்கு புகார் மனு ஒன்றை சரத்குமார் தாக்கல் செய்திருக்கிறார்.

சரத்குமார்

தனது புகார் மனுவில் சரத்குமார் "நான் இந்திய சட்ட திட்டங்களுக்குட்பட்டு நடக்கும் இந்தியக் குடிமகனாவேன். நான் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவராக உள்ளேன். நான் ஏற்கனவே ராஜ்ய சபை உறுப்பினராக இருந்துள்ளேன். நான் தற்போது தென்காசி சட்ட மன்ற உறுப்பினராக உள்ளேன். மேலும் நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராக கடந்த 6 ஆண்டுகளும், தலைவராக கடந்த 9 ஆண்டுகளாக இருந்து வந்தேன்.

கணக்கு, வழக்குகளை

தற்பொழுதுள்ள புதிய நிர்வாகிகள் கேட்ட கணக்குகள் அனைத்தையும் நடிகர் சங்கத்தின் பொதுகுழுவால் நியமிக்கப்பட்ட ஆடிட்டர் மூலமாக தணிக்கை செய்யப்பட்ட ஆவணங்கள் முறையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக கேட்கப்பட்ட ஒவ்வொரு கடிதத்திற்கும் முறையாக விளக்கக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது.

பெயருக்கும், புகழுக்கும்

இச்சூழ்நிலையில் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்தில் எனது வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக எனது பெயருக்கும் , எனது புகழுக்கும் எனது கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் என் மீதும் மற்றும் ஏற்கனவே இருந்த இரண்டு ட்ரஸ்டிகள் மீதும் காவல் ஆணையாளரிடம் பூச்சிமுருகன் ஊழல் புகார் ஒன்று கொடுத்துள்ளதாக ஊடகங்கள் மூலம் செய்தி பரப்பி வருகிறார்.

மன உளைச்சல்

மேற்படி புகார் உண்மையில்லை. இச்செய்தியை பார்த்த பலர் அலைபேசி மூலம் என்னைக் கேட்டதின் பேரில் நான் மிகுந்த மன உளைச்சலுக்கும், மன வேதனைக்கும் ஆளாகியுள்ளேன். பூச்சிமுருகன் தொடர்ந்து எனது எனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதைத் தடுத்து அவர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று தான் தாக்கல் செய்துள்ள புகார் மனுவில் சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.

English summary
Former Actor Association President Sarathkumar Lodged a Complaint Against Poochi Murugan&Co.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil