»   »  ஃபேஸ்புக்கில் 'நாட்டாமை'க்காக காத்திருந்து தூங்கிப் போன ரசிகர்கள்

ஃபேஸ்புக்கில் 'நாட்டாமை'க்காக காத்திருந்து தூங்கிப் போன ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சரத்குமார் ரசிகர்கள் தன்னிடம் ஃபேஸ்புக் மூலம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

நடிகர் சரத்குமார் தெலுங்கு படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே அவர் ரசிகர்களுடன் ஃபேஸ்புக் மூலம் உரையாடியுள்ளார். ரசிகர்கள் தன்னிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

விமானம் தாமதமானதால் அறிவித்தபடி இரவு 9 மணிக்கு உரையாடலை துவங்க முடியவில்லையாம். இதனால் ரசிகர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் குறிப்பிட்ட சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்துள்ளார். சிலர் சரத்திற்காக காத்திருந்து அவர் வராததால் தூங்கச் சென்றுவிட்டனர்.

கூட்டம்

கூட்டம்

வருகிற ஞாயிற்றுகிழமை தமிழ் நடிகர்கள் ஆலோசனை கூட்டம்
சரத்குமார் ராதாரவி ரீத்திஷ் ஆகியோர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்..............உண்மையா? என ஒருவர் கேட்டதற்கு தெரியாது என்று பதில் அளித்துள்ளார் சரத்.

மோடி ஸ்ட்ரோக்

மோடி ஸ்ட்ரோக்

மோடியின் மாஸ்டர்ஸ்ட்ரோக் பற்றி ஒருவர் கேட்டதற்கு சரத் கூறுகையில், இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். பொதுமக்கள், வர்த்தகர்களின் அவஸத்தையை தடுத்திருக்கலாம் என்றார்.

விடியல்

விடியல்

வேளச்சேரி மற்றும் விடியல் ஆகிய படங்கள் என்னானது என்ற கேள்விக்கு சரத் அளித்த பதில், கிட்டத்தட்ட கிடப்பில் போடப்பட்டன, வருத்தம் என்றார்.

தலைவா

தலைவா

தலைவா உங்களின் மாஸ் படங்களுக்காக காத்திருக்கிறோம் என்றார் ரசிகர் ஒருவர். அதற்கு சரத், அடங்காதே பதில் தரும் என்றார்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

இப்பவும் எப்படி இளமையாக பாடியை மெயின்டெய்ன் பண்ணுறீங்க என்ற கேள்விக்கு உடற்பயிற்சி என பதில் அளித்தார் சரத்குமார்.

English summary
Actor Sarathkumar had a chat session with his fans on Facebook.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil