Don't Miss!
- Lifestyle
உங்க எடையை சீக்கிரம் குறைக்க உதவும் இந்த உணவுகளை நீங்க பிரிட்ஜில் சேமித்து வைத்து சாப்பிடலாம்!
- News
போட்டித்தேர்வு மாணவர்கள் படிக்க.. மதுரையில் தொடங்கப்பட்ட முதல் "படிப்பக பூங்கா".. சு.வெ நெகிழ்ச்சி!
- Finance
Gold: வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை.. இப்ப வாங்கலாமா.. நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Sports
சச்சினாலேயே முடியவில்லை, மற்றவர்களால் எப்படி முடியும்.. கோலி, ரோகித்துக்கு அஸ்வின் ஆதரவு
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
இஷ்டத்துக்கு விமர்சனம் எழுதக் கூடாது... வாரிசு கண்டிப்பா 100 நாட்கள் ஓடும்: சரத்குமார் அதிரடி
சென்னை: விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான வாரிசு திரைப்படம் கடந்த வாரம் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
உலகம் முழுவதும் வெளியான வாரிசு திரைப்படத்துக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கலவையான விமர்சனங்கள் கிடைத்த வாரிசு முதல் வாரத்தில் மொத்தம் 210 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் நடந்த வாரிசு சக்சஸ் மீட்டில் பேசிய சரத்குமார், சினிமா விமர்சகர்களுக்கு முக்கியமான வேண்டுகோள் வைத்துள்ளார்.
வாரிசு VS துணிவு... இறுதிக்கட்ட பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் யார் முன்னிலை?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

வாரிசு சக்சஸ் மீட்
பீஸ்ட்டை தொடர்ந்து விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் கடந்த வாரம் 11ம் தேதி ரிலீஸானது. பொங்கல் விருந்தாக வந்த இந்தப் படத்தில் விஜய் பீஸ்ட் மோடில் நடித்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஸ்டைல், டான்ஸ், ஆக்ஷன், காமெடி, சென்டிமெண்ட் என அனைத்து ஏரியாவிலும் வழக்கமான டிரேட் மார்க் விஜய்யை பார்க்க முடிந்தது என கமெண்ட்ஸ்கள் பறக்கின்றன. இந்நிலையில், வரிசு படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.

சரத்குமார் நம்பிக்கை
வாரிசு படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதன்முறையாக விஜய்யுடன் இணைந்த சரத்குமார், அவருக்கு அப்பாவாக நடித்துள்ளார். தமிழில் வாரிசு, தெலுங்கில் வாரிசுடு என்ற டைட்டிலில் வெளியான இந்தப் படம், இதுவரை 210 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இதனால் மேலும் இந்தப் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வாரிசு திரையரங்குகளில் கண்டிப்பாக 100 நாட்கள் ஓடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விமர்சகர்களுக்கு வேண்டுகோள்
வாரிசு படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் வம்ஷி பைடிப்பள்ளி, சரத்குமார், ஷாம் உள்ளிட்ட வாரிசு படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய சரத்குமார் வாரிசு கண்டிப்பாக திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடும் எனக் கூறினார். மேலும், தரமான படங்களுக்கு அழகாக விமர்சனம் எழுதுங்கள். ரசிகர்களே படம் பார்த்து முடிவு செய்துகொள்ளட்டும். உங்களின் கருத்துகளை அவர்கள் மீது திணிக்காதீர்கள் என சினிமா விமர்சகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எப்போதும் அதிரடி தான்
ஏற்கனவே வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என பேசி பரபரப்பை உண்டாக்கினார். சரத்குமாரின் இந்த கருத்து சோஷியல் மீடியாக்களில் வைரலானதுடன், ரசிகர்களிடமும் விவாதத்தை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் ஃபீல்டில் இருக்கும் போதே விஜய் தான் சூப்பர் ஸ்டார் என எப்படி சொல்லலாம் என ரஜினி ரசிகர்கள் கொதித்தெழுந்தனர். இதுகுறித்து பின்னர் அவர் விளக்கமும் கொடுத்திருந்தார். இந்நிலையில், தற்போது சினிமா விமர்சனம் குறித்தும் அதிரடியாக கருத்து கூறியுள்ளது வைரலாகி வருகிறது.