»   »  சரத்குமாரை வளர்ப்புத் தந்தையாக கருதவில்லை- ரயான் சரத்குமார்

சரத்குமாரை வளர்ப்புத் தந்தையாக கருதவில்லை- ரயான் சரத்குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சரத்குமாரை நான் வளர்ப்புத் தந்தையாகக் கருதவில்லை என்று நடிகை ராதிகாவின் மகள் ரயான் தெரிவித்து இருக்கிறார்.

ராதிகாவின் மகள் ரயானுக்கும், சுழற்பந்துவீச்சாளர் அபிமன்யு மிதுனுக்கும் அடுத்த வருட செப்டம்பர் மாதத்தில் திருமணம் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் "சரத்குமாரை நான் வளர்ப்புத்தந்தையாக கருதவில்லை. அவரை ஒரு தந்தையை விடவும் அதிகமாக நான் கருதுகிறேன்.

Sarathkumar is Above than a Father - Rayane

என்னுடைய நிச்சயதார்த்தத்தின்போது அவரை என்னுடைய வளர்ப்புத் தந்தை என்றே எல்லோரும் எழுதினார்கள். அது எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

அவர் என்னை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். என்னுடைய எல்லா விஷயங்களிலும் அவர் எனக்குத் துணை நிற்கிறார். எனக்கு எப்போதும் ஊக்கம் அளிக்கும் என்னிடம் பாசம் காட்டும் அவரை ஒரு தந்தையை விட மேலானவராகவே நான் பார்க்கிறேன்".

என்று ராதிகா - சரத்குமார் தம்பதிகளின் மகளான ரயான் தெரிவித்து இருக்கிறார்.

English summary
Radhika's Daughter Rayane Says in Recent Interview "Sarathkumar is Above than a Father and He is Always Encouraged me".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil