»   »  பிடிவாதம் தளர்ந்தது... புனித் ராஜ்குமாருக்கு அப்பாவாக நடிக்கும் சரத்குமார்!

பிடிவாதம் தளர்ந்தது... புனித் ராஜ்குமாருக்கு அப்பாவாக நடிக்கும் சரத்குமார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆமாம், சரத்குமாரின் தவத்தைக் கலைத்திருக்கிறார்கள் கன்னடக்காரர்கள். நடிகர் சங்க தேர்தல் அடிக்குப் பிறகே சரத்குமாருக்கு வரிசையாக அடிகள். தேர்தலுக்கு முன்பே கட்சி உடைந்தது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணி போய், பின்னர் அப்படியே அலேக்காக அதிமுக பக்கம் வந்தும் கடைசியில் தேர்தலில் படுதோல்வியே மிஞ்சியது. மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கவிருந்த படமும் ட்ராப் ஆனது.

இந்நிலையில் கன்னடத்தில் புனித் ராஜ்குமாருக்கு அப்பாவாக ராஜகுமாரா என்ற படத்தில் நடிக்கிறாராம். இதுவரை தமிழில் அப்பா வேடம் என்று யாரும் போனால் முடியாது என்று சொல்லிவிடுவார்.

Sarathkumar to play Punith Rajkumar's father

ஸ்ரேயாவுக்கு அப்பாவாக மட்டும் ஜக்குபாய் படத்தில் நடித்தார். ஆனால் கன்னடம் என்பதால் ஓகே சொல்லியிருக்கிறார். இதைக் கேள்விபட்டு சில தமிழிலும் அணுகியிருக்கிறார்கள். அவர்களுக்கு நோ சொல்லிவிட்டாராம்.

தமிழில் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்தவர்கள் எல்லாம் தெலுங்கில் வில்லனாக நடித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் கூட சரத்குமார் இணையலாம்.

English summary
Sarathkumar is playing father role in Punith Rajkumar's Rajakumara movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil