twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாக்களிப்பது உங்கள் உரிமை.. ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள்.. சரத்குமார் பேட்டி!

    |

    சென்னை : சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் தங்கள் வாக்கினை செலுத்தினர்.

    தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கின்றன. தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    3,998 வேட்பாளர்கள் போட்டி

    3,998 வேட்பாளர்கள் போட்டி

    தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 பேர் ஆண்கள், 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பேர் பெண்கள். 7,192 பேர் 3ஆம் பாலினத்தவர். தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    விறுவிறுப்பான வாக்குப்பதிவு

    விறுவிறுப்பான வாக்குப்பதிவு

    காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி வரிசையில் நின்று தங்கள் வாக்கினை செலுத்தினர். மேலும், ரஜினிகாந்த், சிவக்குமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்

    வாக்களித்தார்

    வாக்களித்தார்

    இந்நிலையில் நடிகரும் சமத்துவமக்கள்கட்சித் தலைவருமான சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் கொட்டிவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தங்களது வாக்குகளை செலுத்தினர்

    விட்டுக்கொடுக்காதீர்கள்

    விட்டுக்கொடுக்காதீர்கள்

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், ஜனநாயகக் கடமையை நிச்சயம் நிறைவேற்றுங்கள் வாக்களிப்பது உங்களது உரிமை அதை விட்டுக்கொடுத்துவிடாதீர்கள். தேர்தல் ஆணையம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. வாக்குச்சாவடிக்கு வரும் போதே வாக்காளர்கள் மாஸ்க் மற்றும் கை உறை அணிந்து வந்தால் நேரம் வீணாகாமல் இருக்கும் என்று இவர் கூறினார்.

    English summary
    Sarathkumar, Radhika Rasathkumar cast their votes
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X