twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தயாரிப்பாளர் சங்கம் Vs பெப்சி: சரத்குமார் சமரச முயற்சி!

    By Shankar
    |

    Sarathkumar and Radhika
    தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி இடையிலான மோதல் கிட்டத்தட்ட கிளைமாக்ஸை நெருங்கிவிட்டது.

    இருதரப்புமே தங்கள் நிலையில் தீவிரமாக உள்ளனர். சம்பளம் கொடுக்கிற முதலாளிகளையே மிரட்டுவதா என்ற நினைப்பில் தயாரிப்பாளர்களும், தொழிலாளர்கள் இல்லாமல் சினிமாவா என்ற கோபத்தில் தொழிலாளர்களும் முரண்டுபிடித்துக் கொண்டிருப்பதால் விவகாரம் முடிகிறமாதிரி தெரியவில்லை.

    எங்கு்ம் இல்லாத விசித்திரமாக, முதலாளிகளே தொழிலாளர் அமைப்பை உருவாக்கும் முயற்சியை தமிழ் சினிமாவில் பார்க்க முடிகிறது. இருக்கிற அமைப்பை பலவீனப்படுத்துவது இதன் நேரடி காரணம்.

    ஏப்ரல் 7-ம் தேதி முதல் முழு ஸ்ட்ரைக் என பெப்சி அறிவிக்க, அதற்குப் போட்டியாக, வரும் 7-ம் தேதியிலிருந்து அனைத்து வேலைகளையும் முழுவீச்சில் ஆரம்பிப்போம் என தயாரிப்பாளர்களும் அறிவித்துள்ளனர்.

    இந்த ஏட்டிக்குப் போட்டி நிலையை சுமூகமாக்க இயக்குநர் கே பாலச்சந்தர் ஏற்கெனவே முயன்றார். ஆனால் அதில் என்ன பலன் கிடைத்தது என்று தெரியவில்லை.

    இந்த நிலையில், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் சமரச முயற்சியில் இறங்கியுள்ளார்.

    தயாரிப்பாளர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பெப்சி அமைப்புடன் பேசி, விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

    சண்டை ஓய்ந்தால் சரி!

    English summary
    Now actor Sarathkumar, president of Nadigar Sangam is trying to cool down the tension between FEFSI and producers council.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X