twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மிக்சர் காமெடி.. நாட்டாமை டீச்சர்.. மறக்க முடியுமா? வெள்ளி விழா கொண்டாடும் நாட்டாமை ரிலீஸ்!

    |

    Recommended Video

    Natamai 25 Years : நாட்டாமை டீச்சர் மறக்க முடியுமா?-வீடியோ

    சென்னை: சொம்புத் தண்ணி, டே தகப்பா, மிக்சர் காமெடி, அந்த நாட்டாமை டீச்சர் இதையெல்லாம் தமிழ் ரசிகர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். சரத்குமார் இரு வேடங்களில், நடித்த நாட்டாமை படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

    நீதி வழுவாமா வாழணும், அப்படி தப்பா ஒரு தீர்ப்பு கொடுத்தாலும், உசுர விட்றணும்னு வாழ்ந்த உண்மையான நாட்டாமைகளை பெருமை படுத்தும் வகையில் இந்த நாட்டாமை படம் உருவாகியிருந்தது.

    கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவான நாட்டாமை படத்தில் சரத்குமார், குஷ்பு, மீனா, விஜய குமார், பொன்னம்பலம், மனோரமா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    எத்தனை நாட்டாமை

    எத்தனை நாட்டாமை

    கோர்ட்டுகளுக்கு போகாமல் பஞ்சாயத்து தீர்ப்புகளுக்கு கட்டுப்பட்டு இன்னமும் எத்தனையோ கிராமங்களில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அப்படி பஞ்சாயத்து தலைவர்களாக இருக்கும் நாட்டாமைகளை குறித்து தமிழ் சினிமாவில், சின்ன கவுண்டர், எஜமான் படங்களுக்கு பிறகு தீர்ப்பு சொல்லும் நாட்டாமைகளை வைத்து பண்ண படம் நாட்டாமை. நாட்டாமை படத்தின் வெற்றிக்கு பிறகு பல நாட்டாமை படங்கள் தமிழில் வெளியாகின.

    ஊரைவிட்டு ஒதுக்கி வச்சிடுவேன்

    ஊரைவிட்டு ஒதுக்கி வச்சிடுவேன்

    நாட்டாமை படங்களில் பெரும்பாலும், ஊரைவிட்டு ஒதுக்கி வச்சிடுவேன் என்கிற தண்டனை தான் ஹைலைட். அப்படி ஊரைவிட்டு ஒதுக்கி வச்சிடுவேன்னு சொன்ன குடும்பத்துடன் ஊர் மக்கள் யாரும் அன்னம், தண்ணி புலங்க கூடாது அப்படி புலங்குனா அவங்களையும் நாட்டாமை ஊரைவிட்டு ஒதுக்கி வச்சிடுவார்.

    அஜித்தின் சிட்டிசன் படத்தில், நாட்டாமை படத்தில் சொல்வது போல, வில்லன்களை நாட்டை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற தீர்ப்பை அஜித் கோருவார். பாகுபலி படத்தில், ராஜமாதா பாகுபலி மற்றும் அவரது மனைவியை நாட்டை விட்டு ஒதுக்கி வைப்பார். இதுபோன்ற பல படங்களிலும் நாட்டாமையின் தாக்கம் இருக்கும்.

    பிக் பிரேக்

    பிக் பிரேக்

    1994ம் ஆண்டு வெளியான நாட்டாமை படம்தான் நடிகர் சரத்குமாருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, சூர்யவம்சம், நட்புக்காக, சமுத்திரம், மாயி, திவான், ஐயா என பல கிராமத்து சப்ஜெக்ட் படங்களில் சரத்குமார் நடித்து தள்ளினார்.

    மிக்சர் காமெடி

    மிக்சர் காமெடி

    நாட்டாமை படத்தின் கதை மிகவும் சீரியஸாக நகர்ந்தாலும், மற்றொரு புறம் தனக்கே உரிய ஸ்டைலில் கே.எஸ். ரவிக்குமார், காமெடிக்கான பகுதியில் சிக்சர் அடித்து கொண்டிருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கவுண்டமணி, செந்தில் காமெடி காலத்தால் அழியாத ஒன்று.

    சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் செந்தில், கவுண்டமணிக்கு தந்தையாக நடித்திருப்பார். டே தகப்பா என கவுண்டமணி சொல்வது மற்றும், இங்க இவ்வளவு பிரச்சனை நடக்குது இவன் யாரு மிக்சர் தின்னுட்டு இருக்கான்னு சொல்லும் காமெடிகள் இன்றும் மீம் மெட்டீரியலாக உலா வருகின்றன.

    நாட்டாமை டீச்சர்

    நாட்டாமை டீச்சர்

    நாட்டாமை படத்தில் செக்ஸியான டீச்சராக வரும் ரக்‌ஷாவை இன்றும் பலரும் மறந்திருக்க மாட்டார்கள். நாட்டாமை டீச்சரை வெச்சிருக்காருடா என கவுண்டமணி செய்யும் காமெடியும் படத்தில் ஹைலைட்டாக அமைந்தது.

    ராமராஜனின் வில்லுப்பாட்டுக்காரன் படத்தில் அறிமுகமான ரக்‌ஷா நாட்டாமை படத்தில் கவர்ச்சி டீச்சராக நடித்திருந்தார். பின்னர், விக்ரமின் ஜெமினி படத்தில் வரும் ஓ போடு பாடலுக்கு நடனமாடியவரும் அதே நாட்டாமை டீச்சர் தான்.

    சரத்குமார் ட்வீட்

    நாட்டாமை படம் ரிலீசாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அந்த படம் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பல பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

    அதனை பார்த்து மகிழ்ந்த சரத்குமார், "நாட்டாமை திரைப்படம் வெளிவந்த 25-வது வருடத்தை கொண்டாடி அன்பையும் வாழ்த்து செய்தியையும் அனுப்பும் சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி. கலையுலகத்திலும், மக்களிடமும் நாட்டாமையாய் என்னை அடையாளப்படுத்திய படைப்பாளி #கேஎஸ்ரவிக்குமார், #RBசெளத்ரி அவர்களுக்கும் நன்றி" என ட்வீட் செய்துள்ளார்.

    English summary
    Sarathkumar's Nattamai movie which released in the year 1994 now completed 25 years. Still now also Nattamai resemblance and Comedy will be remebered by tamil audience.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X