Don't Miss!
- Sports
இந்திய அணிக்கு 2 தமிழக வீரர்களுக்கு அழைப்பு.. ஆஸி.யை சமாளிக்க திட்டம்.. மொத்தம் 6 பேர் சேர்ப்பு
- News
சீறிப்பாய்ந்த எப் 22 விமானம்.. சீனாவின் "ராட்சச" உளவு பலூனை.. சுட்டு வீழ்த்தியது அமெரிக்க விமானப்படை
- Technology
சாம்சங் நிறுவனத்திற்கு போட்டியாக புதிய பிளிப் போனை இந்தியாவில் இறக்கிவிடும் Oppo.! அறிமுகம் எப்போது?
- Lifestyle
வார ராசிபலன் 05 February to 11 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமா இல்லன்னா பணஇழப்பு ஏற்படும்
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தளபதி டூ சூப்பர் ஸ்டார் விஜய்... சரத்குமார் பற்ற வைத்த நெருப்பு... கொதிக்கும் ரஜினி ரசிகர்கள்...
சென்னை:
விஜய்
நடித்துள்ள
வாரிசு
திரைப்படத்தின்
இசை
வெளியீட்டு
விழா
நேற்று
நடந்து
முடிந்தது.
சென்னை
நேரு
உள்விளையாட்டு
அரங்கில்
நடைபெற்ற
இந்த
நிகழ்ச்சியில்,
விஜய்
உட்பட
வாரிசு
படக்குழுவினர்
கலந்துகொண்டனர்.
விஜய்யுடன் முதன்முறையாக நடித்துள்ள சரத்குமாரும் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சரத்குமார் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

களைக்கட்டிய வாரிசு ஆடியோ லான்ச்
விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, குஷ்பு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், எஸ்ஜே சூர்யா, ஷாம் உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவிலும் வாரிசு படக்குழுவினர் உற்சாகமாக கலந்துகொண்டனர்.

தளபதி விஜய் டூ சூப்பர் ஸ்டார் விஜய்
கோலிவுட்டில் எப்போதுமே அடிக்கடி ஓடிக் கொண்டிருக்கும் ஒரு டாப்பிக் என்றால், அது அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கேள்வி தான். ரஜினிதான் தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக தொடர்ந்து வலம் வருகிறார். அவரே நிரந்தரமான சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்கள் உறுதியாக கூறி வருகின்றனர். சிம்பு மட்டும் அவர் சினிமாவில் அறிமுகமான ஆரம்பத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற டைட்டிலோடு வலம் வந்தார். இந்நிலையில், இதுவரை தளபதி என கொண்டாடப்பட்ட விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு நேற்று வாரிசு இசை மேடையில் ஒலித்தது.

சரத்குமார் பற்ற வைத்த நெருப்பு
விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சை நேற்று முதன்முதலாக சரத்குமார் தொடங்கி வைத்துள்ளார். விஜய்யுடன் வாரிசு படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் சரத்குமார். இதுதான் அவருக்கு விஜய்யுடன் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று வாரிசு இசை மேடையில் அவர், "சூர்யவம்சம் பட 175வது நாள் விழாவில் பேசிய போது எதிர்காலத்தில் விஜய் தான் சூப்பர் ஸ்டாராக வருவார் என்றேன். அது நிறைவேறிவிட்டது. இப்போது விஜய் தான் சூப்பர் ஸ்டார். அப்போ இதை நான் சொன்னபோது கருணாநிதி கூட ஆச்சர்யப்பட்டார்" என கூறினார். இதனைக் கேட்ட விஜய் ரசிகர்கள் அரங்கமே அதிரும் அளவிற்கு உற்சாக குரல்களை எழுப்பி ஆர்ப்பரித்தனர்.

கொதிக்கும் ரஜினி ரசிகர்கள்
விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சரத்குமார் பேசியது, அடுத்த நொடியே சமூக வலைத்தளங்களில் வைரலாகத் தொடங்கியது. இதனால் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளாத விஜய் ரசிகர்களும் சோஷியல் மீடியாக்களில் சூப்பர் ஸ்டார் விஜய் என்ற கமெண்ட்ஸ்களை தெறிக்கவிட்டனர். இதனால், சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் ஆடிப்போயுள்ளனர். ஏற்கனவே கடந்த சில வருடங்களாக சரியான வெற்றிப் படம் அமையாமல் போராடி வரும் ரஜினி, ஜெயிலர் படத்தை பெரிதும் நம்பியுள்ளார். இந்நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரேஸில் விஜய் நாமினேட் ஆகியுள்ளதை ரஜினி ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே சொல்லப்படுகிறது. அதேநேரம் இதுகுறித்து ரஜினி ரசிகர்கள் தரப்பில் இருந்து இதுவரை எந்த எதிர்வினையும் வராமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.