»   »  சினிமாவுக்கு வரும் சரத்குமாரின் இரண்டாவது மகள்!

சினிமாவுக்கு வரும் சரத்குமாரின் இரண்டாவது மகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பிரியதர்ஷினி இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் 'சக்தி' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து, ஒரு பெண் இயக்குனர் இயக்கும் படம் இது. பிரியதர்ஷினி இயக்குநர் மிஷ்கினிடம் பணியாற்றியவர் ஆவார்

தமிழ், மலையாளம், தெலுங்கு என 3 மொழிகளில் இந்தப் படம் ஒரே நேரத்தில் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

Sarathkumar's second daughter pooja introduced in cinema

போலீஸுக்கும் வில்லனுக்கும் இடையில் நடக்கிற ஒரு கேம்தான் படம். அதை சுவாரஸ்யமானச் சொல்லும் திரைக்கதையுடன் கூடிய த்ரில்லர் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் காஸ்ட்யூம் டிசைனராக சரத்குமாரின் இளைய மகளும் வரலட்சுமி சரத்குமாரின் தங்கையுமான பூஜா அறிமுகமாகவிருக்கிறார்.'சக்தி' படத்தை 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

English summary
Varalaxmi SarathKumar plays the lead role of 'Sakthi' directed by Priyadarshini who worked with Mysskin. Varalaxmi plays the role of a female police officer in this film. SarathKumar's younger daughter pooja introduced as a costume designer by this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X