Don't Miss!
- News
பாஜக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமிக்கு உரிய பதில் கொடுக்கப்படும்.. டெல்லிக்கு செல்லும் அண்ணாமலை!
- Automobiles
சிஎம் பேரனா இருந்தாலும் தப்பிக்க முடியாது! இத்தன லட்சம் கார்களை அழிக்க போறாங்களா! திடீர் அதிரடியால் கலக்கம்!
- Lifestyle
பலவீனமான சிறுநீரகங்களை வலுவாக்க வேண்டுமா? இதோ அதற்கான சில எளிய இயற்கை வழிகள்!
- Finance
1 அல்ல 2 இல்ல.. 35000 கோடி..! பட்ஜெட் 2023 அறிவிப்பால் கஜானாவில் ஓட்டை.. எந்த அறிவிப்பு..?!
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விஜய் மாதிரி அஜித்தும் சூப்பர் ஸ்டார் தான்... தீர்ப்பை மாற்றி சொன்ன நாட்டாமை... பஞ்சாயத்து ஓவர்
சென்னை: விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ம் தேதி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட சரத்குமார் நடிகர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் எனக் கூறியிருந்தார்.
ஏற்கனவே விஜய் தான் நம்பர் 1 என தில் ராஜூ கூறியிருந்த நிலையில், சரத்குமாரின் கருத்தும் சர்ச்சையானது.
இந்நிலையில், விஜய்யை ஏன் சூப்பர் ஸ்டார் எனக் கூறினேன் என்று சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
வாரிசு பட தயாரிப்பாளருடன் இணையும் தனுஷ்.. யார் டைரக்டர் தெரியுமா?

விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வரும் 11ம் தேதி ரிலீஸாகிறது. வாரிசுக்குப் போட்டியாக அஜித்தின் துணிவு படமும் அதேநாளில் வெளியாகிறது. இதனிடையே வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் விஜய், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட வாரிசு படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் பேசிய சரத்குமார், விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார், சூர்ய வம்சம் படத்தின் வெற்றி விழாவிலேயே இதனை நான் கூறியிருந்தேன் என்றார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானதுடன், ரசிகர்களிடம் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

தொடரும் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து
முன்னதாக கோலிவுட்டில் விஜய் தான் நம்பர் 1 நடிகர், அஜித் அடுத்த இடத்தில்தான் இருக்கிறார் என வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு பேசியதும் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி என்பவர், விஜய் தான் ரியல் சூப்பர் ஸ்டார். ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டார் தான் என்றார். மேலும், தில் ராஜு சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. மக்கள் விஜய்யை அந்த இடத்தில் வைத்துவிட்டார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனால் கோபமான ரஜினி ரசிகர்கள் பிஸ்மியின் அலுவலகம் சென்று சண்டையிட்டது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பை மாற்றி சொன்ன நாட்டாமை
விஜய் தான் கோலிவுட்டின் நம்பர் 1 நடிகர், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற விவாதத்தை அவரது ரசிகர்கள் தொடர்ந்து வைரலாக்கி வருகின்றனர். மேலும் ரஜினி, அஜித் ஆகியோரையும் விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விவாகரம் குறித்து நடிகர் சரத்குமார் விளக்கம் கொடுத்துள்ளார். பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள அவர், "நான் ரஜினி சார் சூப்பர் ஸ்டார் இல்லையென்று சொல்லவில்லை. அஜித்குமார் சூப்பர் ஸ்டார் இல்லையென்றும் நான் சொல்லவில்லை. விஜய் சூப்பர் ஸ்டார் ஆவார் என்றுதான் சொன்னேன். ரசிகர்களை கவர்கின்ற எல்லா நடிகர்களும் சூப்பர் ஸ்டார்தான். அமிதாப்பச்சனும் ஷாருக்கானும் சூப்பர் ஸ்டார்கள்தான்" எனக் கூறியுள்ளார்.

ட்ரெண்டாகும் சரத்குமார் பேட்டி
மேலும், "சூப்பர் ஸ்டார் என்பது ஒரு டைட்டில் கிடையாது, இந்த கருத்தை சர்ச்சையாக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. அதேபோல் இதனை புரியவைக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. விஜய் முதலமைச்சர் ஆவார் என்றோ, மத்திய அமைச்சார் ஆவார் எனவோ சொல்லவில்லை. விஜய்யும் சூப்பர் ஸ்டார் ஆவார் என்றே சொல்லிருந்தேன். வாழ்க்கையில் ஜெயிக்கும் எல்லோருமே சூப்பர் ஸ்டார் தான். விஜய் சேதுபதி வரும் போதும் அரங்கமே அதிர்கிறது. அப்போ அவரும் சூப்பர் ஸ்டார் தான். சூர்யவம்சம் பட வெற்றிவிழாவில் சொன்னதை தான் இப்போதும் பேசினேன். ஆனாலும் ரியல் சூப்பர் ஸ்டார் என்றால் அது என்றுமே எம்ஜிஆர் தான் என வெளிப்படையாக கூறியுள்ளார். இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.