»   »  மகனுக்கு ஜிம்மில் பயிற்சியளிக்கும் 'எவர் யங்' சரத்குமார்... வீடியோ வெளியிட்ட ராதிகா

மகனுக்கு ஜிம்மில் பயிற்சியளிக்கும் 'எவர் யங்' சரத்குமார்... வீடியோ வெளியிட்ட ராதிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil
மகனுக்கு ஜிம்மில் பயிற்சியளிக்கும் 'எவர் யங்' சரத்குமார்...வீடியோ

சென்னை : நடிகர் சரத்குமார் தற்போது தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இளம் வயதில் மிஸ்டர் சென்னை பட்டம் வென்ற சரத்குமார் 60 வயது தாண்டியும் இன்னும் இளமையோடு தான் இவர் இருக்கிறார்.

தனது இளமைக்கும், உடல் நலத்துக்கும் முக்கிய காரணம் தான் தினமும் கடைப்பிடிக்கும் உணவுமுறை மற்றும் தினந்தோறும் மேற்கொள்ளும் உடற்பயிற்சி தான் என அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

Sarathkumar training his son

இப்போது தன் மகனையும் தன்னுடன் ஜிம்மிற்கு அழைத்து வந்து அவரையும் உடற்பயிற்சி செய்ய வைக்கிறார் சரத்குமார். கடினமான உடற்பயிற்சிகளையும் கூட இந்த வயதிலும் அசால்ட்டாக செய்து வியப்புக்குள்ளாக்கி இருக்கிறார் சரத்குமார்.

மகனுடன் சேர்ந்து சரத்குமார் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சரத்குமாரின் மனைவி ராதிகா வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் சரத்குமார் மகனும் அவரைப் போலவே ரெடியாகி வருவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

English summary
Sarathkumar is at the age of 60, is still young. He has said in many interviews that the main reason for her youth and health is the exercise and good diet. Sarathkumar is now training his son in Gym to exercise. Radhika released the video of Sarath Kumar's Exercise with his son.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X