பாவனி கண்ணீர் விட்டால் சென்னையில் வெள்ளம் வந்துடும்...போட்டியாளர்களை கலாய்த்த சரத்குமார்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிறைவடைய இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளது. தற்போது போட்டியாளர்களாக 7 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இவர்களில் அமீர், டிக்கெட் டு ஃபினாலே சுற்றில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்று விட்டார்.
அமீரை தவிர மீதமுள்ள 6 பேரில் அடுத்து வெளியேற போகிறவர் யார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கிடையில் பணப்பெட்டி டாஸ்க்கிற்காக பணப் பெட்டியுடன் சரத்குமார் நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். போட்டியாளர்கள் பற்றி கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் ஒவ்வொருவரையும் அவர் தனித்தனியாக கலாய்த்தது ரசிகர்களை மிகவும் ரசிக்க வைத்தது.

பிரியங்காவிற்கு கேக் போதும்
வீட்டிற்குள் வந்த உடனேயே தாமதமாக ஓடி வந்து நின்ற தாமரையை பார்த்து, என்ன தாமரை அவசரமாக வருகிறீர்கள். குளத்தில் இருந்து வர்றீங்களா என கேட்டு கலாய்த்தார். பிறகு பிரியங்கா பற்றி பேசிய சரத்குமார், டாஸ்கில் இருந்து மனதை மாற்றி விலக வைக்க வேண்டுமானால் பிரியங்காவிற்கு ஒரு கப் கேக் கொடுத்தால் போதும் என்றார்.

ராஜு என்ன சொன்னாலும் நியூஸ்
ராஜு என்ன சொன்னாலும் நியூஸ், மீம்ஸ் தான். குளிக்க போகிறேன் என்று சொன்னா கூட நியூஸ் தான். அந்த அளவிற்கு டாப்பிற்கு சென்று விட்டீர்கள். நிரூப், அடுத்த சீசனில் ப்ரொஃபசரை போல் பிக்பாஸில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என மற்றவர்களுக்கு கிளாஸ் எடுக்கும் அளவிற்கு ஆகி விட்டார். சிபி எப்போதும் வெளிப்படையான ஆள். ஆனால் வீட்டிற்கு போயும் அப்படியே இருக்காதீர்கள். நிறைய பிரச்சனை வந்து விடும் என்றார் சரத்குமார்.

பாவனி அழுதா வெள்ளம் வரும்
பாவனி கண்ணீர் விட்டால் சென்னையில் வெள்ளம் வந்து விடும். அந்த அளவிற்கு கண்ணீர் விடுகிறார். அவருக்கு பாவனின்னு பெயர் வைத்ததற்கு பதில் பாவம் நீன்னு பெயர் வைத்திருக்கலாம் கரெக்டாக இருந்திருக்கும் என்றார். ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி சரத்குமார் கலாய்த்தது அனைவரையும் ரசிக்க வைத்தது.
Recommended Video

சாப்பிட்ட கேக் என்னாச்சு
தாமரையுடன் மோதும் டாஸ்க் கொடுத்த போது பிரியங்கா திணறிக் கொண்டிருந்தார். அப்போது கூட, என்ன பிரியங்கா என்னாச்சு...எத்தனை கப் கேக் சாப்பிட்டிருப்பீர்கள். சாப்பிட்ட கப் கேக் எல்லாம் என்ன ஆச்சு என்றார். ஆனால் டாஸ்க் என சரத்குமார் கூறியதும், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்பது போல் என்னால் முடியாது சார் என்றார் பிரியங்கா.


Click it and Unblock the Notifications











