தமிழ்த்திரைப்பட வரலாற்றில் மாபெரும் சாதனை.. பொன்னியின் செல்வன் படத்தை நெல்லையில் பார்த்த சரத்குமார்!
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தை ரசிகர்களுடன் திரையரங்கில் கண்டு களித்துள்ளார் நடிகர் சரத்குமார்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சரத்குமார்.
இந்நிலையில், அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

பெரிய பழுவேட்டரையர்
பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் கம்பீரமாக நடித்து அசத்தி உள்ளார் சரத்குமார். நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராயின் கணவராக இந்த படத்தில் அவர் நடித்துள்ளார். இந்நிலையில், ரசிகர்களுடன் தியேட்டரில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த அனுபவத்தை வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரஜினி நடிக்க நினைத்தது
இயக்குநர் மணிரத்னத்தின் தளபதி படத்தில் நடிக்கவே ஏகப்பட்ட கஷ்டங்களை அனுபவித்ததாக பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசி அரங்கத்தையே அதிர வைத்த ரஜினிகாந்த், பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் தானே நடிக்கிறேன் என சொல்லியும் மணிரத்னம் வேணாம்னு சொல்லிட்டாரு. என்று பேசியிருந்தார். அப்படியொரு ரோலில் தான் சரத்குமார் நடித்து அசத்தி உள்ளார்.

ரசிகர்களுடன் படம் பார்த்த சரத்குமார்
இந்நிலையில், திருநெல்வேலியில் காவல் கிணறு பகுதியில் உள்ள சக்கரவர்த்தி தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை பார்த்துள்ளார் நடிகர் சரத்குமார். அது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

தமிழ்த்திரைப்பட வரலாற்றிலேயே
"தமிழ்த்திரைப்பட வரலாற்றில் மாபெரும் சாதனை முத்திரை பதித்திருக்கும் #பொன்னியின்செல்வன்1 திரைப்படத்தை நேற்றிரவு நெல்லை மாவட்டம், காவல் கிணறு பகுதியில் அமைந்துள்ள சக்கரவர்த்தி திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்து, அவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்த இனிய தருணம் #ManiRatnam #ps1" என பதிவிட்டுள்ளார் சரத்குமார்.

2ம் பாகத்தில் சம்பவம் இருக்கு
பெரிய பழுவேட்டரையரை பகடைக் காயாக வைத்தே நந்தினி ஐஸ்வர்யா ராய் ஆதித்த கரிகாலனை பழிவாங்கும் மிகப்பெரிய சம்பவம் இரண்டாம் பாகத்தின் இடைவேளையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தை விட சரத்குமாருக்கு இரண்டாம் பாகத்தில் இன்னும் பெரிய ஸ்கோப் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் வாரிசு
பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சரத்குமார் விஜய்யின் வாரிசு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொன்னி நதி பாடல் தான் விஜய்க்கு சமீபத்தில் பிடித்த பாடல் என பொன்னியின் செல்வன் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் சரத்குமார் பேசியிருந்தார். வாரிசு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.


Click it and Unblock the Notifications











