77 வயதில் புது இன்னிங்ஸைத் தொடங்கிய கங்கை அமரன்.. சரத்குமார் போட்ட போஸ்டை பாருங்க!

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு சகோதரர்களாக களமிறங்கி இன்றைக்கு குடும்பமாகவே வென்று கொண்டு இருக்கும் குடும்பம் என்றால், அது இசைஞானி இளையராஜா மற்றும் கங்கை அமரன் சகோதரர்களையும் அவர்களின் குடும்பத்தையும் சொல்லலாம். மிகவும் இளம் வயதில் சினிமா வாய்ப்பு தேடி இளையராஜாவுடன் வந்த கங்கை அமரன், தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும் பாடகராகவும், இயக்குநராகவும் வெற்றிக் கொடி நாட்டியவர். இப்படி இருக்கும்போது கங்கை அமரன் தனது 77 வது வயதில் நடிகர் அவதாரம் எடுத்துள்ளார்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் டிடி பாலசந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லெனின் பாண்டியன். இந்த படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் அதாவது கதையின் மையக் கதாபாத்திரமாக நடிக்கிறார் கங்கை அமரன். கங்கை அமரன் இதற்கு முன்னர் தனது படங்களில் ஒரு நிமிடத்தில் அறிமுக வீடியோவில் மட்டும் என்ட்ரி கொடுத்து நடித்துள்ளார். அதுவும் அவர் இயக்கிய படங்களில் தான் அதுபோலச் செய்துள்ளார். இப்படி இருக்கும்போது அவரை கதையின் மையக் கதாபாத்திரமாக கொண்டு லெனின் பாண்டியன் என்ற படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Sarathkumar X Page Post About Gangai Amaren Turs As Actor For Lenin Pandiyan Movie

புது அவதாரம்: அறிமுக இயக்குநர், சத்ய ஜோதி பிலிம்ஸ், நடிகராக கங்கை அமரன் எனும்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது ஒரு நம்பிக்கை இயல்பாகவே ஏற்படுகிறது. இது மட்டும் இல்லாமல், படக்குழு தரப்பில் இருந்து வெளியிடப் பட்டுள்ள ஒரு நிமிட வீடியோவில் கங்கை அமரனைப் பார்க்கும்போது படத்தில் அட்டகாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது.

சரத்குமார் வாழ்த்து: இந்நிலையில் இந்த ஒரு நிமிட வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சரத்குமார் கங்கை அமரனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதாவது, " இயக்குநராக பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர், பாடலாசிரியராகவும் இசையமைப்பாளராகவும் ஜொலித்தவர் கங்கை அமரன். அவர் தனது திரை வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை நடிகராக தொடங்குகிறார். அவருக்கும் லெனின் பாண்டியன் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

Sarathkumar X Page Post About Gangai Amaren Turs As Actor For Lenin Pandiyan Movie

குடும்பம்: கங்கை அமரன் இயக்குநராகவும் பாடலாசிரியராகவும் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் ஜொலித்தவர். குறிப்பாக பாடலாசிரியராக கவிஞர் வாலியே தனக்கு இணையான கவித்திறன் படைத்த பாடலாசிரியர் கங்கை அமரன் என்று மனதார பாராட்டும் அளவுக்கு திறமையான பாடலாசிரியர். இப்படியான கங்கை அமரன் தனது 77 வது வயதில் சினிமாவில் நடிகராக களமிறங்கியுள்ளதை பலரும் பாராட்டி வருகிறார்கள். இவரது மூத்த மகன் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான கமர்ஷியல் இயக்குநராக உள்ளார். அதேபோல் இளைய மகன் பிரேம் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் பாடலாசிரியராகவும் கலக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X