»   »  ஸ்பான்சர்ஷிப், ரூ.2.5 கோடி நிதி: ரஜினி, கமல் முன்பே கெத்து காட்டிய "சரவணா ஸ்டோர்ஸ் ஓனர்"

ஸ்பான்சர்ஷிப், ரூ.2.5 கோடி நிதி: ரஜினி, கமல் முன்பே கெத்து காட்டிய "சரவணா ஸ்டோர்ஸ் ஓனர்"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மலேசியாவில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் செம கெத்து காட்டியுள்ளார்.

நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி திரட்ட மலேசியாவில் நட்சத்திர கலைவிழாவை நடத்தினார்கள். இதில் சுமார் 350 நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.

அரசியலில் குதித்துள்ள ரஜினியும், கமலும் கலந்து கொண்டனர்.

கமல்

கமல்

ரஜினிகாந்தும், கமல் ஹாஸனும் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி மாஸ் காட்டினார்கள். அவர்களை பார்த்தவுடன் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

சரவணா அருள்

சரவணா அருள்

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணா அருள் மலேசியா நட்சத்திர கலைவிழாவுக்கு ஸ்பான்சர் செய்துள்ளார். இதனால் அவரும் மலேசியா சென்று கலைவிழாவில் கலந்து கொண்டார்.

புகைப்படம்

புகைப்படம்

மலேசியா விழாவில் சரவணா அருள், ரஜினிகாந்த் அருகே அமர்ந்திருந்தார். மேலும் மேடையிலும் ரஜினியுடன் சேர்ந்து நின்று மாஸ் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 2.5 கோடி

ரூ. 2.5 கோடி

ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் இல்லை சுளையா ரூ. 2.5 கோடி ரூபாயை நடிகர் சங்க கட்டிடம் கட்ட அளித்துள்ளார் சரவணா அருள். அதற்கான காசோலையை ரஜினியும், கமலும் மேடையில் வாங்கிக் கொண்டனர்.

நெட்டிசன்ஸ்

நெட்டிசன்ஸ்

சரவணா அருளுடன் சேர்ந்து பிரபலங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவர் மலேசியா சென்ற நிலையில் #SaravanaStores என்ற ஹேஷ்டேக்குடன் பலரும் அவரை பற்றி ட்விட்டரில் பேசியுள்ளனர்.

English summary
Saravana stores owner Saravana Arul has not only sponsored the Malaysia Natchathira Kalaivizha but also donated Rs. 2.5 crore to the Nadigar Sangam. Netizens are busy talking about him on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X