twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்நியன் அவதாரம் எடுத்த தி லெஜண்ட் ஹீரோ..பல மொழியில் மாறி மாறி புரோமோஷன். மிரட்டுபோன ரசிகர்கள்!

    |

    சென்னை : "தி லெஜண்ட்" திரைப்படத்தின் புரோமோஷன் விழாவில் தமிழ், தெலுங்கு, இந்தி,இங்கிலீஸ் என அனைத்து மொழிகளிலும் லெஜண்ட் சரவணன் பேசி மிரட்டி உள்ளார்.

    Recommended Video

    Legend Saravana நிஜ வாழ்க்கை | Untold story of Saravanan Arul *Celebrity | Filmibeat Tamil

    சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் அனைத்து வயதுடைய ஹீரோயின்களுடனும் ஆட்டம் போட்டு வந்த லெஜண்ட் சரவணன் , வெள்ளித்திரையில் காலடி எடுத்துவைத்து மிரட்டி உள்ளார்.

    உல்லாசம், விசில் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தி லெஜ்ண்ட்.

    வாயில பிளாஸ்த்ரி.. காதுல ஹெட்போன்ஸ்.. எப்படி சமாளிக்கப் போறாங்க காம்போ டாஸ்கை? வாயில பிளாஸ்த்ரி.. காதுல ஹெட்போன்ஸ்.. எப்படி சமாளிக்கப் போறாங்க காம்போ டாஸ்கை?

    லெஜண்ட் சரவணன்

    லெஜண்ட் சரவணன்

    லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் இந்த படத்தின் மூலம் திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுக்க உள்ளார். தி லெஜண்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தில் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, பிரபு, நாசர், சச்சு, ரோபோ சங்கர், யோகிபாபு, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யாஷிகா ஆனந்த், ராய்லட்சுமி ஆகியோர் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி உள்ளனர்.

    ஹிட்டடித்த பாடல்கள்

    ஹிட்டடித்த பாடல்கள்

    தி லெஜண்ட்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில், பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ராய் லட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், டிம்பிள் ஹயாதி, ஸ்ரீ லீலா, நுபுர் சனான், ஊர்வசி ரௌதாலா ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்தில் மொசலோ மொசலு, வாடிவாசல் உள்ளிட்ட பாடல்களும் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றன.

    2500க்கும் மேற்பட்ட திரையரங்குகள்

    2500க்கும் மேற்பட்ட திரையரங்குகள்

    இத்திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 800க்கும் அதிகமான திரையரங்கிலும், உலகளவில் 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் படம் என பல்வேறு பாராட்டுக்களை இந்தப் படம் பெற்றுள்ளது. உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு இணையான வரவேற்பை இந்தப்படம் பெற்றுள்ளது.

    அந்நியன் அவதாரம்

    பான் இந்திய திரைப்படமாக தி லெஜண்ட் வெளியாக உள்ளதால், இத்திரைப்படத்திற்காக பல ஊர்களில் தீவிர புரோமோஷன் பணிகளை லெஜண்ட் சரவணன் மேற்கொண்டு வருகிறார். அனைத்து தரப்பு மக்களையும் கவர அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, இங்கிலீஸ் என அனைத்து மொழிகளும் அந்நியன் போல மாறி மாறி பேசி கைத்தட்டலை பெற்றார்.

    மாஸ் ஸ்டோரி

    மாஸ் ஸ்டோரி

    எல்லா தடைகளையும் எதிர்கொண்டு சமுதாயத்திற்கு ஏதாவது நல்லது செய்ய முயற்சிக்கும் ஒரு சாதாரண மனிதன் பின் நாளில் எப்படி லெஜண்டாக மாறுகிறான் என்பது தான் கதை. சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டு இப்படம் மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன், மாஸ், காமெடி, ரொமான்ஸ் மற்றும் எமோஷன் என அனைத்தும் இப்படத்தில் இருப்பதாக லெஜண்ட் சரவணன் கூறினார்.

    English summary
    Legend Saravanan is making his film debut with the film The Legend which he himself produced. This mega-budget film will release on 28th July in theatres in multiple languages
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X