»   »  அதிசயம் ஆனால் உண்மை: உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு இபிஎஸ் அரசு...

அதிசயம் ஆனால் உண்மை: உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு இபிஎஸ் அரசு...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல் பேக்கிரவுண்ட் இருப்பினும் உதயநிதி ஸ்டாலினின் இரண்டு படங்களுக்கு மட்டுமே இதுவரை வரி விலக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக செயல் தலைவரான மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு வரி விலக்கு கிடைப்பது உலக அதிசயமாக உள்ளது.


அவரின் ஒவ்வொரு படத்திற்கும் வரி விலக்கு விஷயத்தில் பிரச்சனை ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.


சரவணன் இருக்க பயமேன்

சரவணன் இருக்க பயமேன்

எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து ஹீரோவாக நடித்த சரவணன் இருக்க பயமேன் படம் இன்று ரிலீஸானது. இந்த படத்திற்கு எடப்பாடி பழனிசாமி அரசு வரி விலக்கு அளித்துள்ளது.


வரி விலக்கு

உதயநிதி ஸ்டாலினின் படம் ஒன்றுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் சரியான நேரத்தில் வரி விலக்கு கிடைத்துள்ளது என்றால் அது சரவணன் இருக்க பயமேனுக்கு தான்.


இது கதிர்வேலன் காதல்

இது கதிர்வேலன் காதல்

முன்னதாக உதயநிதி ஸ்டாலின் நடித்த இது கதிர்வேலன் காதல் படத்திற்கு வரி விலக்கு கிடைத்தது. ஆனால் உதயநிதி நீதிமன்றம் சென்று போராடி வரி விலக்கு பெற்றார்.
இரண்டு படங்கள்

இரண்டு படங்கள்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான படங்களில் இது கதிர்வேலன் காதல், சரவணன் இருக்க பயமேன் ஆகிய இரண்டு படங்களுக்கு மட்டுமே வரி விலக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Udhayanidhi Stalin starrer Saravanan Irukka Bayamaen has got tax exemption from EPS government. This is the first time his movie gets tax exemption on time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil