தமிழ் ராக்கர்ஸ் வேலையா?.. இவ்வளவு வேகமா?.. இணையத்தில் வெளியான பிரின்ஸ், சர்தார் படங்கள்
சென்னை: கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படங்கள் தீபாவளியை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளன.
இரண்டு படங்களுக்குமே கலவையான விமர்சங்களுடன் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலேயே சர்தார், பிரின்ஸ் திரைப்படங்களுக்கு அதிர்ச்சியான சம்பவம் நடந்தேறியுள்ளது.

கார்த்தியின் சர்தார்
விருமன், பொன்னியின் செல்வன் படங்களைத் தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள சர்தார் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்துள்ள சர்தார் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கார்த்தி ரா அதிகாரியாகவும், போலீஸ் கேரக்டரிலும் நடித்துள்ளார். கார்த்தியுடன் ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள சர்தார், தீபாவளிக்கு செம்மையான ஆக்சன் ட்ரீட்டாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்
கார்த்தியின் சர்தார் ஆக்சன் ட்ரீட்டாக அமைந்துள்ளது என்றால், சிவகார்த்திகேயனின் சர்தார் செம்ம ஜாலியாக அட்ராசிட்டி செய்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். சிவகார்த்திகேயன், சத்யராஜ், மரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை அனுதீப் இயக்கியுள்ளதும், இது தமிழ், தெலுங்கில் ரிலீஸாகியுள்ளதும் எல்லாருக்கும் தெரிந்ததே. இந்நிலையில், கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் இந்த இரண்டு படங்களுக்கும் அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

இணையத்தில் ரிலீஸ்
திரையுலகினருக்கு எப்போதுமே தொந்தரவு கொடுத்து வரும் தமிழ் ராக்கர்ஸ், இப்போதெல்லாம் கூடுவிட்டு கூடு பாய்வது போல, அடிக்கடி பெயரை மாற்றி தண்ணீ காட்டி வருகிறது. இப்போது இந்த தமிழ் ராக்கர்ஸ் டீம் சர்தார், பிரின்ஸ் படங்களை ஆன்லைனில் ரிலீஸ் செய்து படக்குழுவினருக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. திரையரங்குகளில் வெளியாகி ஒருநாள் கூட ஆகாத நிலையில், சர்தார், பிரின்ஸ் படங்களின் முதல் காட்சி முடிந்த அடுத்த நிமிடமே சுடச்சுட இணையத்தில் வெளியாகியுள்ளது. இது படக்குழுவினர் மட்டும் இல்லாமல், ரசிகர்களுக்கும் செம்ம ஷாக்கிங்காக அமைந்துள்ளது.

என்னதான் நடக்கிறது?
புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான அடுத்த நிமிடமே இணையத்திலும் வெளியாவது புரியாத புதிராகவே உள்ளது. சில தினங்களுக்கு முன்னர் கூட, அருண் விஜய் நடிப்பில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸ் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இப்போது சர்தார், பிரின்ஸ் படங்கள் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகிவிட்டன. தமிழ் ராக்கர்ஸ் தளம் மட்டும் இல்லாமல், டெலிகிராம் என்ற செல்போன் ஆப்பிலும் இந்தப் படங்கள் வெளியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாடு அரசு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதியளித்துள்ள நிலையில், முதல் நாளே சர்தார், பிரின்ஸ் படங்கள் இணையத்தில் வெளியானதால் வசூலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











