twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரின்ஸ் படத்தை பிரித்து மேய்ந்த சர்தார் வசூல்.. தீபாவளி போட்டியில் கெத்துக் காட்டிய கார்த்தி!

    |

    சென்னை: இந்த தீபாவளிக்கு முன்னணி நடிகர்கள் படங்கள் எதுவுமே ரிலீஸ் ஆகாதது ரசிகர்களை பெரிதும் ஏமாற்றம் அடைய செய்தது.

    ஆனாலும், தீபாவளி ரிலீசாக வெளியான சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் உள்ளிட்ட படங்களில் எந்த படம் அதிக வசூல் ஈட்டியது என்கிற போட்டியில் கார்த்தியின் சர்தார் பிரின்ஸ் படத்தை பந்தாடியுள்ளதாக ரிப்போர்ட்டுகள் வெளியாகி உள்ளன.

    சர்தார் படத்தின் பட்ஜெட் மற்றும் தீபாவளி வரை அந்த படம் செய்த வசூல் குறித்து இங்கே விரிவாக பார்ப்போம்..

     தீபாவளிக்கு இவ்வளவு படங்கள் திரையரங்குகளில் ரிலீசாகுதா.. அடேங்கப்பா! தீபாவளிக்கு இவ்வளவு படங்கள் திரையரங்குகளில் ரிலீசாகுதா.. அடேங்கப்பா!

    ஏகப்பட்ட கெட்டப்புகள்

    ஏகப்பட்ட கெட்டப்புகள்

    இந்த ஆண்டு கோப்ரா படத்தில் சியான் விக்ரம் போட்ட கெட்டப்புகளை விட சர்தார் படத்திற்காக கார்த்தி போட்டுள்ள கெட்டப்புகள் தான் அதிகம். சர்தாராக கார்த்தி வரும் காட்சிகள் எல்லாமே கூஸ்பம்ப்ஸ் கொடுக்கின்றன. மூன்றாம் உலகப் போரே தண்ணீருக்குத்தான் நடக்கும் என்கிற கருத்தை மையமாக வைத்து வாட்டர் பாட்டில்களால் ஏற்படும் பிரச்சனையை ஒரு ஸ்பை த்ரில்லர் ஆக்‌ஷன் படமாக கொடுத்து சாதித்துள்ளார் இயக்குநர் பி.எஸ். மித்ரன்.

    சர்தார் பட்ஜெட்

    சர்தார் பட்ஜெட்

    சர்தார் படத்தின் பட்ஜெட் வெறும் 30 கோடி மட்டுமே என்கின்றனர். இந்த பட்ஜெட்டில் ஷங்கர், கே.வி ஆனந்த் ஸ்டைல் படத்தை இயக்குநர் பி.எஸ். மித்ரன் கொடுத்ததற்காகவே அவரை பாராட்ட வேண்டும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், தீபாவளியுடனே படத்தின் பட்ஜெட்டை தாண்டி நல்ல வசூலை படம் செய்துள்ளதாகவும் ரிப்போர்ட்டுகள் கிடைத்துள்ளன.

    தீபாவளி வசூல்

    தீபாவளி வசூல்

    கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கார்த்தியின் சர்தார் படம் திங்கட்கிழமை தீபாவளி வரை தொடர்ந்து 80 சதவீத ரசிகர்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 6.4 கோடி வசூலையும் உலகம் முழுவதும் 9.4 கோடி வசூலையும் ஈட்டியிருந்த சர்தார் திரைப்படம் தீபாவளி பண்டிகையான நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 10.25 கோடி, ஆந்திரா/தெலங்கானாவில் 1.8 கோடி உலகளவில் ஒட்டுமொத்தமாக 13.45 கோடி வசூல் செய்துள்ளது.

    50 கோடியை நோக்கி

    50 கோடியை நோக்கி

    வெறும் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சர்தார் திரைப்படம் ஒட்டுமொத்தமாக இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 34.25 கோடி வசூலையும் உலகளவில் 47.25 கோடி வசூலையும் ஈட்டியுள்ளது. செவ்வாய்க்கிழமையான இன்றும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் கண்டிப்பாக 8 கோடி ரூபாய் வசூல் தமிழ்நாட்டில் மட்டும் கிடைக்கும் என்றும் 50 கோடிக்கும் அதிகமான வசூலை சர்தார் தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரின்ஸ் எவ்வளவு

    பிரின்ஸ் எவ்வளவு

    முதல் நாளில் சர்தார் படத்தை விட அதிக வசூல் பெற்ற சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் நெகட்டிவ் விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் குறைவான வசூலையே பெற்றது. தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களில் ஒட்டுமொத்தமாக 23.9 கோடி ரூபாய் வசூலையும், உலகளவில் 32.6 கோடி ரூபாய் வசூலையும் பிரின்ஸ் படம் பெற்றுள்ளது. 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படம் ஹிட் அடிக்க 100 கோடி வசூல் செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால், பட்ஜெட் அளவுக்கு கூட படத்தின் ஒட்டுமொத்த வசூல் வருமா என்பது சந்தேகம் தான் என்கின்றனர்.

    English summary
    Sardar Box office Collection are increasing day by day and it gets a huge box office on Diwali day too. Actor Karthi wins over this Diwali race against Sivakarthikeyan's Prince in both critics and box office.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X