»   »  தமிழ்ப் படங்களுக்கு என்னாச்சுப்பா... ஜங்கிள் புக், சர்தார் கப்பர் சிங்கெல்லாம் ஓடுதே!

தமிழ்ப் படங்களுக்கு என்னாச்சுப்பா... ஜங்கிள் புக், சர்தார் கப்பர் சிங்கெல்லாம் ஓடுதே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வாரம் 8 படங்கள் வரை வெளியானாலும் சர்தார் கப்பர் சிங், ஜங்கிள் புக் போன்ற பிறமொழிப் படங்களே சென்னையில் வசூலைக் குவித்துள்ளன.

கிடா பூசாரி மகுடி தொடங்கி 8 சிறு பட்ஜெட் படங்கள் கடந்த வாரம் தமிழ்நாட்டில் வெளியாகின.

தமிழ்ப் படங்கள் தவிர சர்தார் கப்பர் சிங், ஜங்கிள் புக் போன்ற பிறமொழிப் படங்களும் வெளியானது.

பாக்ஸ் ஆபிஸ்

பாக்ஸ் ஆபிஸ்

இந்நிலையில் கடந்த வார நிலவரப்படி சென்னை பாக்ஸ் ஆபீஸில் ஜங்கிள் புக் முதலிடத்தையும், சர்தார் கப்பர் சிங் 2 வது இடத்தையும், கார்த்தியின் தோழா 3 வது இடத்தையும் கைப்பற்றியுள்ளது.முதலிரண்டு இடங்களில் எந்தத் தமிழ்ப் படமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜங்கிள் புக்

ஜங்கிள் புக்

ஜங்கிள் புக்கை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசித்ததில் அப்படம் சென்னையில் மட்டும் சுமார் 89 லட்சங்களை வசூலித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் நடிகர்களுக்கு ஈடாக ஜங்கிள் புக் வசூலைக் குவித்து வருகிறது.

பவன் கல்யாண்

பவன் கல்யாண்

ஒருபுறம் ஜங்கிள் புக்கை ரசித்தாலும் பவன் கல்யாணின் ஆக்ஷன் விருந்தும் ரசிகர்களைக் கவர, 3 நாட்கள் முடிவில் சர்தார் கப்பர் சிங் 39 லட்சங்களுக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.சர்தார் கப்பர் சிங் மூலம் தமிழ்நாட்டிலும் தன்னுடைய மாஸைக் காட்டி, கோலிவுட் ஹீரோக்களை அதிர வைத்திருக்கிறார் பவர் ஸ்டார் பவன் கல்யாண்.

தோழா

தோழா

என்னடா இது தமிழ்நாட்டில் தமிழ்ப் படங்களுக்கு வந்த சோதனை என்று பதறிய நமக்கு, 32 லட்சங்களை வசூல் செய்து கார்த்தியின் தோழா சற்றே ஆறுதல் அளித்துள்ளது.

தெறி

தெறி

இன்னும் 2 தினங்களில் விஜய்யின் தெறி வெளியாவதால், பிறமொழிப் படங்களின் வசூல் கட்டுக்குள் வரும் என்று விநியோகஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Read more about: the jungle book, thozha, தோழா
English summary
Sardar Gabbar Singh, The Jungle Book Beat Tamil Movies in Chennai Box Office.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil