பிக் பாஸ் மைனா நந்தினிக்கு நன்றி சொன்ன சர்தார் கார்த்தி
சென்னை: இந்த ஆண்டு பிற மொழிப் படங்களுக்கு அமைந்தது போல தமிழ் சினிமாவிற்கும் நல்லதாகவே அமைந்தது என்றே சொல்லலாம்.
மற்ற மொழி படங்கள் இங்கு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தபோது விக்ரம், பொன்னியின் செல்வன், சர்தார் என்று அடுத்தடுத்த வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவும் கொடுத்துள்ளது.
இந்நிலையில் இந்தப் படம் குறித்து சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் நடிகை மைனாவை குறிப்பிட்டு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார் கார்த்தி.

நடிப்பதே பெருமை
சர்தார் மேக்கப் அணிந்து கொண்டு நடிப்பதே எனக்கு பெருமையாக இருந்தது. அப்படி இருக்கும் பொழுது ஒரு மனிதன் தனது குடும்பத்திற்காக அல்ல தனது நாட்டிற்காக உயிரை பணயம் வைத்து ஒரு செயலை செய்கிறான், அந்தச் செயல் வெற்றி பெறுமா தான் மீண்டும் குடும்பத்தை சந்திப்போமா மீண்டும் தாய் நாட்டிற்கு திரும்புவோமா என்று எதுவுமே தெரியாமல் ஒரு நபர் அதை செய்கிறார் என்றால் அவருடைய மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று பெருமையாக பேசியுள்ளார்.

தண்ணீர் கேன்
என் மனைவி பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதை முன்னரே தவிர்த்துவிட்டார். ஆனால் இந்த கதை கேட்டபோது தான் நான் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் குடிப்பதை நிறுத்தினேன். கதையைக் கேட்டபோதே எனக்குள் ஒரு பயத்தை அது ஏற்படுத்தியது. இப்போது எங்கு சென்றாலும் 10 லிட்டர் எவர் சில்வர் கேனுடன்தான் செல்கிறேன், அதிலிருக்கும் தண்ணீரைத்தான் குடிக்கிறேன் என்று கார்த்தி கூறியுள்ளார்.

மூன்று முருகன்
இந்தப் படத்தில் நாடக நடிகராக நடித்துள்ள கார்த்தி முருகன் வேடமும் அணிந்திருந்தார். சமீபத்தில் தான் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் சூர்யா முருகன் வேடம் அணிந்து ஒரு பாடலில் நடித்திருப்பார். முருகன் கதாபாத்திரம் என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருபவர் இவர்களுடைய தந்தை சிவகுமார்தான். இந்த மூன்று முருகன்களில் எந்த முருகன் அழகானவர் என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, நான் மட்டுமல்ல தமிழ்நாடே சொல்லும் அப்பாதான் அழகான முருகர் என்று கார்த்தி பதிலளித்துள்ளார்.

மைனா நந்தினி
வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான மைனா நந்தினி பின்னர் வெப்பம், வம்சம், காஞ்சனா 3, அரண்மனை 3, விக்ரம் போன்ற பல படங்களில் நடித்துவிட்டார். கடைசியாக நடிகர் கார்த்தி நடித்திருந்த விருமன் திரைப்படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்த மைனா சர்தார் திரைப்படத்திலும் ஒரே ஒரு பாடலுக்கு, நாங்கள் கேட்டுக் கொண்டதால் ஆடிக் கொடுத்தார். மைனாவின் அந்த அன்புக்கு நன்றி என்று கார்த்தி மைனாவை குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











