»   »  மாதவன்… ஜாக்கி ஷெராஃப்… செம ஸ்டைலிஷ் கதையை இயக்கும் சற்குணம்!

மாதவன்… ஜாக்கி ஷெராஃப்… செம ஸ்டைலிஷ் கதையை இயக்கும் சற்குணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சை மண்ணை சேர்ந்த இயக்குநர் சற்குணம் கிராமத்துக் கதைகளைத்தான் இதுவரை படமாக்கி வந்தார். களவாணி முதல் சண்டிவீரன் வரை எந்தப் படத்துக்கும் அவர் தஞ்சாவூரை தாண்டவில்லை. ஆனால் அடுத்தப் படம் அப்படி இருக்காதாம்.

சற்குணத்தின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கவிருப்பவர் மாதவன். இறுதிச்சுற்று படத்துக்கு பின் அடுத்த படத்தை தேர்வு செய்ய காலம் எடுத்துக்கொண்டவருக்கு பிடித்தது சற்குணத்தின் ஸ்க்ரிப்ட்தான்.

Sargunam to direct Madhavan and Jackie Sheroff

கதைக்கு ஓகே சொன்னதோடு அந்த கேரக்டருக்கு கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைத்திருக்கிறார். இந்த படத்தில் மாதவனோடு ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃபும் நடிக்கிறாராம்.

இந்த படத்தின் பெரும்பகுதி பாங்காங்கில் படமாக்கப்பட உள்ளது.

English summary
For the first time Director Sargunam is directing a stylish movie with Madhavan and Jackie Sheroff in the lead.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil