»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகர் கமலஹாசனின் மனைவி சரிகா 2வது மாடியிலிருந்து தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ளது நடிகர் கமலின் வீடு. அது 2 மாடிகளைக் கொண்ட வீடாகும். திங்கள்கிழமைஇரவு 11 மணிக்கு மொட்டை மாடியில் உட்கார்ந்து தன் உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் சரிகா.

அப்போது அவர் கையில் வைத்திருந்த செல்போன் தவறிக் கீழே விழ இருந்தது. அது விழாமல் இருக்க முயன்றசரிகா, எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி, மொட்டை மாடியிலிருந்து கீழே விழுந்தார்.

உட்கார்ந்த நிலையிலேயே அவர் கீழே விழுந்தார். தவிர, அவர் விழுந்த இடம் மணல் பகுதியாக இருந்ததால்பெரிய ஆபத்து இல்லாமல் பிழைத்தார். இருந்தாலும் அவர் வலியால் கடுமையாகத் துடித்தார்.

சம்பவம் நடந்தபோது, தன்னுடைய ராஜ்கமல் பட நிறுவனத்தில் "ஆளவந்தான்" படத்தின் எடிட்டிங் வேலையைக்கவனித்துக் கொண்டிருந்தார் கமல். அவருக்கு செய்தி கிடைத்ததும், உடனடியாக வீ"ட்டிற்குச் சென்றார்.

உடனடியாக சரிகா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் முதுகு வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.அதனால் நரம்பு சிகிச்சை நிபுணர் வரவழைக்கப்பட்டார். சரிகாவின் முதுகுத்தண்டுப் பகுதி ஸ்கேன் செய்துபார்க்கப்பட்டபோது, முதுகுத்தண்டில் பலத்த அடிபட்டிருப்பது தெரிய வந்தது.

முதுகுத்தண்டு ஆபரேஷன் செய்வதற்காக, புகழ்பெற்ற மும்பை டாக்டர் வரவழைக்கப்பட்டார். சரிகாவைப்பரிசோதித்த அந்த டாக்டர், ஆபரேஷனுக்குப் பிறகு தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்று கூறினார். இதனால்ஆபரேஷனை மும்பையிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மாலை சரிகா மும்பைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

முன்னதாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னம், கிரேஸி மோகன், மவுலி, பட அதிபர் தாணு ஆகியோர்சரிகாவிடம் உடல் நலம் விசாரித்து, கமலஹாசனுக்கு ஆறுதல் கூறினர்.

Read more about: cinema, injury, kamalhaasan, sarika, tamilnadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil