»   »  குடும்ப கோர்ட்டில் சரிதா ஆஜர்

குடும்ப கோர்ட்டில் சரிதா ஆஜர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனு தொடர்பாக நடிகை சரிதாவும், அவரது கணவர் முகேஷும் தனித் தனியாக குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் சரிதா. இடையில் டிவி தொடரிலும் நடித்தார். சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

இருவருக்கும் ஒரு மகன் உள்ளார். சில வருடங்களாக இருவரும் தனியாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மகன் சரிதா வசம் உள்ளார். அவரை வாரம் ஒருமுறை பார்த்து வருகிறார் முகேஷ். இந்த நிலையில் மகனை தன்னுடன் தங்க வைக்க அனுமதி கோரி கொச்சி நீதிமன்றத்தில் முகேஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில், சரிதா, விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சரிதாவும், முகேஷும் தனித் தனியாக வந்து நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். பின்னர் இருவரும் பிரமாண வாக்குமூலத்தை நீதிபதியிடம் தாக்கல் செய்தனர். பின்னர் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil