»   »  சரிதா, முகேஷ் சமரசப் பேச்சு!

சரிதா, முகேஷ் சமரசப் பேச்சு!

Subscribe to Oneindia Tamil

விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ள நடிகை சரிதாவுக்கும், அவரது கணவர் நடிகர் முகேஷ் மாதவனுக்கும் இடையே சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துள்ள சரிதா, தனது கணவரும், மலையாள நடிகருமான முகேஷ் மாதவனை விட்டுப் பிரிந்து வசித்து வருகிறார். இந்த நிலையில் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பிலும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து இருவரது வழக்கறிஞரகள் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் இதில் உடன்பாடு ஏதும் ஏற்படாததால் வழக்கு விசாரணை மே 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil