»   »  தமிழக வெள்ள நிவாரணத்திற்கு நடிகை சரோஜாதேவி ரூ 5 லட்சம் நன்கொடை

தமிழக வெள்ள நிவாரணத்திற்கு நடிகை சரோஜாதேவி ரூ 5 லட்சம் நன்கொடை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகை சரோஜாதேவி ரூ 5 லட்சத்தை தமிழக வெள்ள நிவாரண நிதியாக அளித்திருக்கிறார்.

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது 78 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்தார்.

Saroja Devi Donates Rs 5 Lakhs for Flood Relief Fund

தனது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அவர் சென்னைக்கு வந்து நடிகர் சங்க நிர்வாகிகளை சந்தித்தார். நடிகர் சங்கத் தலைவர் நாசர், சிவகுமார், மனோபாலா மற்றும் குட்டி பத்மினி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

சரோஜாதேவியின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு பூங்கொத்து கொடுத்து நடிகர் சங்க நிர்வாகிகள் வாழ்த்தினர். மேலும் கேக் வெட்டியும் அவரது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினர்.

இதனைத் தொடர்ந்து தமிழக வெள்ள நிவாரணத்திற்கு ரூ 5 லட்சத்தை நன்கொடையாக சரோஜாதேவி வழங்கினார். இதனை நடிகர் சங்கத் தலைவர் நாசர் பெற்றுக் கொண்டார்.

நடிகர் சங்கம் மூலம் சேருகின்ற இந்தத் தொகையானது முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Yesterday Veteran Actress Saroja Devi Celebrating her 78th Birthday and She Donates Rs 5 Lakhs for Tamilnadu Flood Relief Fund.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos