நன்றி தல… வேம்புலி கதாபாத்திரதை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்… ஜான் கொக்கெனின் நெகிழ்ச்சி பதிவு !
சென்னை : சர்ப்பட்டா பரம்பரை படத்தின் வேம்பு லி கதாபாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பை அஜித் ரசிகர்களுக்கு சமர்ப்பிப்பதாக ஜான் கொக்கென் கூறியுள்ளார்.
Recommended Video
வீரம் படத்தின் போது நான் உங்களுடன் செலவழித்த நேரம், என் வாழ்க்கைக்கான பாடமாக மாறியது என்றார்.
ஒவ்வொரு நாளும் கடின உழைப்பை செலுத்தி நீங்கள் எனக்கு கற்றுக்கொடுத்தீர்கள் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

பா ரஞ்சித் இயக்கம்
பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள சர்பட்டா பரம்பரை அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்று வருகிறது. ஆர்யா, துஷாரா, பசுபதி, ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ்பிரதாப், சபீர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

சிறப்பான நடிப்பு
இதில் கபிலன் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார் ஆர்யா. இந்த படத்திற்காக உடலை முறுக்கேற்றி மிகவும் கடுமையாக உழைத்துள்ளார். அவரின் நடிப்பு மிகவும் பாராட்டும்படி உள்ளது. ஆர்யாவின் திரையுலக வாழ்வில் சிறந்த படங்களில் ஒன்றாக இப்படம் பெயர் சொல்லும்.

வேம்புலி
இப்படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜான் கோகேன் இவரின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் , இவர் சர்பட்டா பரம்பரை படத்தின் வேம்புலி கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பை அஜித்துக்கு சமர்பித்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.

நன்றி தல
நன்றி தல அஜித் சார், நான் என்னையே நம்புவதற்கு எப்போதும் நீங்கள்தான் காரணம். என்னை எப்போதும் உற்சாகப்படுத்துவீர்கள். வீரம் படத்தின் போது நான் உங்களுடன் செலவழித்த நேரம், என் வாழ்க்கைக்கான பாடமாக மாறியது. ஒவ்வொரு நாளும் கடின உழைப்பை செலுத்தி நீங்கள் எனக்கு கற்றுக்கொடுத்தீர்கள். நல்ல மனிதராக இருக்கவும் நீங்களே எனக்கு கற்றுத்தந்தீர்கள் . வேம்புலி கதாபாத்திதை நான் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று அதில் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

பூஜா ராமச்சந்திரன்
ஜான் கோகேன் மும்பையில் பிறந்தவர், இவர் ஒஸ்தி, கேஜிஎஃப், பாகுபலி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நடிகையான மீரா வாசுதேவனை 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கருந்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இரண்டாவதாக நடிகை பூஜா ராமச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











