ஹீரோ ஆகும் சார்பட்டா பரம்பரை நடிகர்...ஜோடி யாரு தெரியுமா ?

சென்னை : டைரக்டர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஜுலை 22 ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்ட படம் சார்பட்டா பரம்பரை. 1970 களில் வடசென்னையில் மிகவும் பிரபலமான பாக்சிங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் அனைத்து தரப்பினரிடமும் மிகுந்த பாராட்டை பெற்றது.

ஒவ்வொரு நடிகரின் நடிப்பும் கவனத்தை ஈர்த்து பாராட்டப்பட்டது. அவர்களின் நிஜப் பெயர்கள் மறந்து, கேரக்டர்களின் பெயர்களாலேயே ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டது. அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு பிரபலமாகி விட்ட நடிகர், நடிகைகளுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.

சார்பட்டா பரம்பரை பார்ட் 2

சார்பட்டா பரம்பரை பார்ட் 2

பா.ரஞ்சித்தும் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போவதாக கூறி, அதற்காக கதை தயாரிப்பில் இறங்கி உள்ளார். இது சார்பட்டா பரம்பரை தோன்றிய கதையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

மிஷ்கின் படத்தில் சந்தோஷ் பிரதாப்

மிஷ்கின் படத்தில் சந்தோஷ் பிரதாப்

சார்பட்டா பரம்பரை படத்தில் கபிலன் ரோலில் ஆர்யாவும், வேம்புலி கேரக்டரில் ஜான் கொக்கனும், டான்சிங் ரோஸ் கேரக்டரில் ஷபீர் கரக்கலும் நடித்திருந்தனர். இதே போல் ராமன் ரோலில் சந்தோஷ் பிரதாப் நடித்திருந்தார். இவர் டைரக்ரை் மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

லீட் ரோலில் நடிக்கிறார்

லீட் ரோலில் நடிக்கிறார்

தற்போது மற்றொரு படத்தில் லீட் ரோலில் நடிக்க சந்தோஷ் ஒப்பந்தமாகி உள்ளார். டான்ஸ் மாஸ்டர் பாபி இயக்கும் படத்தில் தான் ஹீரோவாக நடிக்க போகிறார். இவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்க உள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் பேனரில் சுஜாதா விஜயக்குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அக்டோபர் 8 ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளதாம்.

இது முதல் படமல்ல

இது முதல் படமல்ல

சந்தோஷ் பிரதாப் ஹீரோவாக நடிக்கும் முதல் படம் இது கிடையாது. இவர் இதற்கு முன், கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அது மட்டுமல்ல தாயம், பயமா இருக்கு, மிஸ்டர் சந்திரமெளலி, பொதுநலன் கருதி, தேவ், பஞ்சாக்ஷரம், ஓ மை கடவுளே, இரும்பு மனிதன், என் பெயர் ஆனந்தன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

நெகடிவ் ரோல்

நெகடிவ் ரோல்

போலீஸ் டைரி 2.0, குருதி காலம் போன்ற வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார் சந்தோஷ் பிரதாப். மிஸ்டர் சந்திரமெளலி படத்தில் முதல் முறையாக நெகடிவ் ரோலில் நடித்திருந்தார். ஓ மை கடவுளே படத்தில் வாணி போஜனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X