Don't Miss!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- News
"முன்பதிவு செயலி தேவை" ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை காப்பாற்ற.. தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
குஸ்தி வாத்தியாரை குப்புத்தள்ளிய மீம்ஸ்…. ரங்கன் வாத்தியரை பங்கமாய் கலாய்க்கும் மீம்ஸ் கிரியட்டர்ஸ்!
சென்னை : சார்பட்ட பரம்பரை படத்தில் வரும் ரங்கன் வாத்தியாரையும், கபிலனையும் ஊர்வலமா சைக்கிளில் சுற்றவிட்டு மீம்ஸ் கிரியேட்டர்ஸ் இணையத்தை கதறவிட்டு வருகின்றனர்.
மீம்ஸ் கிரியேட்டர்கள் மற்றும் நெட்டிசன்களால் இரண்டு நாளாக இணையம் அல்லோகலப் படுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
எமோஷனல்
சீனில்
பல
டேக்ஸ்..
திட்டி
தீர்த்த
லிங்குசாமி..
கேரவனில்
கதறி
அழுத
பிரபல
நடிகை..
பரபர
தகவல்!
எது எப்படி எங்களுக்கு கண்டேட் கிடைத்தால் போதும் என்று மீம்ஸ் கிரியேட்டர்ஸ் மீம்ஸுகள் தெறிக்கவிட்டுள்ளனர்.

சார்பட்டா பரம்பரை
பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள சார்பட்டா பரம்பரை அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றது. இதில், ஆர்யா, துஷாரா, பசுபதி, ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ்பிரதாப், சபீர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

குத்துச்சண்டை பயிற்சியாளர்
70களில், சென்னையில் குத்துச்சண்டை பரம்பரைகள் எவ்வாறு செயல்பட்டன என்பதை இந்த திரைப்படத்தில் காட்சிகளாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் எமர்ஜென்சி காலம் உள்ளிட்ட விவரங்களும் இயக்குனர் ரஞ்சித் இதில் கூறியுள்ளார். இதில் பசுபதி குத்துச்சண்டை பயிற்சி ஆளராக மிரட்டி உள்ளார்.

சிறப்பான நடிப்பு
இதில் கபிலன் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார் ஆர்யா. இந்த படத்திற்காக உடலை முறுக்கேற்றி மிகவும் கடுமையாக உழைத்துள்ளார். அவரின் நடிப்பு மிகவும் பாராட்டும்படி உள்ளது. ஆர்யாவின் திரையுலக வாழ்வில் சிறந்த படங்களில் ஒன்றாக இப்படம் பெயர் சொல்லும். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் பேசப்பட்டன. அதிலும் குறிப்பாக டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் பலருக்கும் பிடித்த ஒன்றாக இருந்தது.

மீம்ஸ்
அந்த படத்தில் ஒரு காட்சியில் கபிலன், ரங்கன் வாத்தியாரை சைக்கிளில் அழைத்து செல்லும் காட்சி சமூகவலைத்தளத்தில் மீம்ஸ் கிரேயட்டர்களால் விதவித கோணத்தில் பகிரப்பட்டு மிகவும் வைரலாகி வருகிறது. வைரலாகும் மீம்ஸ்களை பார்த்து சிரித்து சிரித்து வயிறே வலித்து விடுகிறது. ஒரு மீம்ஸில் ரங்கன் வார்த்தியார் திரும்பி உக்காத்து இருக்கிறார். நேர உக்காரு வார்த்தியாரே என்று மிரட்டுகிறார் கபிலன்.

ஆன்லைன் கிளாஸ்
மற்றொரு மீம்ஸ் கிரியேட்டர்ஸ் ஆன் கிளாசால் மிகவும் பாதிக்கப்பட்டவர் போல தெரிகிறது. இதனால், தனது ஆதங்கத்தை, ரங்கன் வாத்தி மேல கொட்டி உள்ளார். வாத்தியாரே வா ஆன்லைன் கிளாஸ் அட்டன் பண்ணுவோம் என்று கூறியுள்ளார்.

போலாமா குதிரை சவாரி
இந்த மீம்ஸ் கிரியேட்டர்ஸ் எங்கே இருந்து தான் இப்படி யோசிப்போங்களோனு தெரியல, செம ட்ரெண்டிங்கில் இருக்கும் சார்ப்பட்ட பரம்பரை மீம்ஸில், வாத்தியாரே சைக்கிள போய் போர் அடிக்கிது. போவோமா ஊர்கோலாம் என்பது போல, வாத்தியாரே வா குதிரை சவாரி போகலாம் என்பது போல மீம்ஸ் கிரியேட் செய்துள்ளனர்.

மாஸ் போடாமே போறோமே
சார்பட்டா பரம்பரை வாத்தியரை இரண்டு நாளா வெச்சு செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ், கொஞ்சம் சமூக அக்கறையுடன் ஒரு மீமை வெளியிட்டுள்ளனர். அதில், கபிலன், வாத்தியாரே, மாஸ் போடாமே போறோமே தப்பில்லையா என்று கேட்கிறார். அதற்கு , தப்புதான் கபிலா, ஓரமா நிறுத்து மாஸ் போட்டுக்கிட்டு போகலாம் என்கிறார்.

பாவம் டா ரங்கன் வாத்தி
அதோடு மட்டும் விடாம, கபிலனுக்கும், ரங்கன் வாத்தியாருக்கும் மாஸ்க் போட்டு அழகு பார்த்துள்ளனர். இந்த மீம்ஸ் உலா வலம் வரத் தொடங்கி உள்ளது. அந்த ரங்கன் வாத்தி என்னையா பாவம் பண்ணாரு, சைக்கிள்ல ஏறுனது ஒரு குத்தமா, பாவம்டா அவரு விட்டுடுங்க என்று கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

வேணாம் டா விட்டுடுங்க
இந்து மீம்ஸ்சை எல்லாம் பார்த்த, ரங்கன் வாத்தி தாங்க முடியாமல் அப்படியே சாய்ந்து விடுகிறார். குஸ்தி வாத்தியாரை குப்புத்தள்ளிய மீம்ஸ் என்றும், டேய் பாவம்டா அவருக்கு என்றும், சுகர் பேஷண்ட்டா நானு என்னை விட்டுவிடுங்கள் என்பது என்று கேட்பது போலவும் பதிவிட்டு வருகின்றனர். இதே போல நண்பர்கள் படத்தில் இடம் பெற்ற சுத்தியல் காமெடி பல வருடங்கள் கழித்து மீம்ஸ் கிரியேட்டர்களால் மிகவும் வைரலானது. தற்போது சார்பட்ட பரம்பரை மீம்ஸ் இணையத்தை தெறிக்கவிட்டு டிரெண்டிங்கில் உள்ளது.