»   »  ஓ.பி.எஸ்.னா ஓ. பன்னீர்செல்வம்னு நினைச்சியா டா- ஆபரேஷன் சசிகலா டா

ஓ.பி.எஸ்.னா ஓ. பன்னீர்செல்வம்னு நினைச்சியா டா- ஆபரேஷன் சசிகலா டா

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்வது குறித்து திரையுலக பிரபலங்கள் ட்வீட்டி வருகிறார்கள்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சசிகலா உள்ளிட்டோர் உடனடியாக சரணடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து தமிழ் திரையுலகினர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஆதிக் ரவிச்சந்திரன்

ஓ.பி.எஸ்.னா ஓ. பன்னீர்செல்வம்னு நினைச்சியா டா- ஆபரேஷன் சசிகலா டா என சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தாமரை

அம்மாவின் மரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு, உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
#TnPolitics

வரலட்சுமி சரத்குமார்

இனிய காதலர் தின வாழ்த்துக்கள். உம்ம்ம்மா.. ஒட்டு மொத்த மாநிலமும் தற்போது அன்பை உணரும் என் நினைக்கிறேன். ஆல் இஸ் வெல்.

சீனு ராமசாமி

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

கவுதமி

ஊழல் வழக்கில் சசிகலா குற்றவாளி. அவர் அம்மாவின் மரணம் குறித்து பதில் சொல்ல வேண்டும். இரண்டு வழக்குகளுக்கும் ஒரே தண்டனை இல்லை. #JusticeForAmma

சிபி சத்யராஜ்

நடிகர் சிபி தனது தந்தை சத்யராஜின் புகைப்படத்தை மட்டும் ட்விட்டரில் போட்டு சூசகமாக கருத்து தெரிவித்துள்ளார்.

English summary
Kollywood celebrities took to twitter to express their views about Sasikala going to jail very soon.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil