»   »  தீயா பரவிய செய்திக்கு காரணம் இதுவோ? அஜித்தின் தல 57ஐ வாங்கிய சசிகலாவின் ஜாஸ் சினிமாஸ்!

தீயா பரவிய செய்திக்கு காரணம் இதுவோ? அஜித்தின் தல 57ஐ வாங்கிய சசிகலாவின் ஜாஸ் சினிமாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜித்தின் தல 57 படத்தை சசிகலாவுக்கு சொந்தமான ஜாஸ் சினிமாஸ் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தல 57 படம் மெகா பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்றது.

Sasikala's Jazz Cinemas acquires Thala 57 rights

பின்னர் பல்கேரியாவில் படமாக்கப்பட்டது. இப்படம் தொடர்பான அஜீத்தின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தல 57 படத்தை சசிகலாவுக்கு சொந்தமான ஜாஸ் சினிமாஸ் நிறுவனம்தான் வாங்கியுள்ளதாம். அதுவும் அஜித்தின் வேதாளம் திரைப்படத்தை விட மிக அதிக விலைக்கு இந்தப் படத்தை வாங்கியிருக்கிறதாம் ஜாஸ் சினிமாஸ்.

இச்செய்தியின் அடிப்படையில்தான் சசிகலாவை போயஸ் கார்டனுக்கு போய் அஜித் பார்த்தார் என்ற செய்தி பரவியிருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

English summary
Ajith's new moive Thala 57 has been acquired by Sasikala's Jazz Cinemas.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil