»   »  தனுஷ் படத்தில் நடிக்கும் சசிகுமார்... 'எனை நோக்கி பாயும் தோட்டா' அப்டேட்!

தனுஷ் படத்தில் நடிக்கும் சசிகுமார்... 'எனை நோக்கி பாயும் தோட்டா' அப்டேட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அந்த குதூகலம் வருமோ என்று தனது தம்பி தனுஷ் பற்றி ட்வீட்டியுள்ளார் இயக்குனர் செல்வராகவன்.

சென்னை : கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகிவரும் படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'.

இந்தப் படம் தொடங்கிய பிறகு தொடர்ச்சியாக ஷூட்டிங் நடக்காததால் அந்த கேப்பில் சில படங்களில் நடித்து விட்டார் தனுஷ்.

இந்நிலையில், தனுஷ் நடிப்பில் மீண்டும் ஷூட்டிங் தொடங்கவிருக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடிகர் சசிகுமார் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

எனை நோக்கி பாயும் தோட்டா

எனை நோக்கி பாயும் தோட்டா

கெளதம் மேனன் இயக்கத்தில் நீண்ட நாட்களாக உருவாகிவரும் படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். சுனேனா முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். தர்புகா சிவா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ஷூட்டிங் பாதிப்பு

ஷூட்டிங் பாதிப்பு

சில பிரச்னைகளால் கிடப்பில் இருந்த இந்தப் படம், கடந்த வருடம் டிசம்பர் மாதம் மீண்டும் புத்துயிர் பெற்றது. சில நாட்கள் இந்தப் படத்தில் நடித்த தனுஷ், அதன்பிறகு பாலாஜி மோகன் இயக்கிவரும் 'மாரி 2' படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார்.

தனுஷ் ஒரு பக்கம்

தனுஷ் ஒரு பக்கம்

அதற்குள், கௌதம் மேனன் விக்ரமை வைத்து 'துருவ நட்சத்திரம்' படத்தை எடுத்து வருகிறார். அந்தப் படத்தின் பணிகளும் இன்னும் முடியவில்லை. 'மாரி 2' ஷூட்டிங் முடிந்ததும் மீண்டும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் தனுஷ் நடிப்பார் என்று தெரிகிறது.

சசிகுமார் நடிக்கிறார்?

சசிகுமார் நடிக்கிறார்?

'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் சசிகுமாரும் தனுஷுடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார் என்கிறார்கள். சில நிமிடங்கள் வரக்கூடிய கெஸ்ட் ரோலில் தான் நடிக்கப் போகிறாராம் சசிகுமார். ஏற்கெனவே ராணா டகுபதியும் இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Dhanush is playing lead role in Gautham Menon's 'Enai noki paayum thotta'. Actor Sasikumar is to do a cameo role with dhanush in the film 'ENPT'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil