»   »  அசோக்குமார் தற்கொலை விவகாரம்: சமரச முடிவில் சசிக்குமார் - அன்புச் செழியன்! Exclusive

அசோக்குமார் தற்கொலை விவகாரம்: சமரச முடிவில் சசிக்குமார் - அன்புச் செழியன்! Exclusive

Posted By:
Subscribe to Oneindia Tamil
அசோக்குமார் தற்கொலை விவகாரம்: சமரச முடிவில் சசிக்குமார் - அன்புச் செழியன்!- வீடியோ

கம்பெனி புரொடக்க்ஷன் இணை தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் விஷால் தேர்தல் விவகாரத்தில் மறந்தே போனார்கள் மக்கள்.

தாரை தப்பட்டை படத்திற்கு வாங்கிய ரூ 18 கோடி பணத்தை பைனான்சியர் அன்புச் செழியனுக்கு திருப்பித் தருவதில் சுணக்கம் காட்டியதால் தன் அதிகார மையமான விநியோகஸ்தர் கூட்டமைப்பு மூலம் கொடிவீரன் ரீலீசுக்கு முட்டுக்கட்டை போட்டார் அன்பு.

Sasikumar - Anbu Chezhiyan compromises in Ashokumar suicide issue?

இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், மன அழுத்தத்தால் கொடிவீரன் இணை தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார், கடிதம் எழுதி வைத்துவிட்டு. இதற்கு காரணம் அன்புச் செழியன்தான் என அக்கடிதத்தில் அசோக்குமார் குறிப்பிட, அதன் பேரில் அன்பு மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று திரையுலகில் பலரும் குரல் கொடுத்தனர்.

அன்புச் செழியன் நல்லவர் என கூறி பலர் பேசினார்கள். இதற்கிடையில் உணர்ச்சிவசப்பட்டு அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டது விரும்ப தகாதசெயல்தான், அதற்கு அன்பு செழியன் எப்படி காரணம் ஆக முடியும் என்று அவர் சார்பில் சசிக்குமார் தரப்புடன் பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வந்தனர்.

கொடிவீரன் ரீலீஸ் செய்வதற்கு அன்புச் செழியன் தடைக் கல்லாக இருக்க மாட்டார். அசோக்குமார் தற்கொலைக்கு அவர்தான் காரணம் என்பதை வலியுறுத்தக்கூடாது என பேசப்பட்டதாகத் தெரிகிறது.

தற்போது இந்த சமரச முடிவு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. சசிக்குமார் கையெழுத்திட்டுக் கொடுத்திருந்த டாக்குமெண்ட், மற்றும் சொத்து பத்திரங்கள் அனைத்தையும் அன்புச் செழியன் திருப்பிக் கொடுத்துவிட்டதாகத் தெரிகிறது.

தன்னிடம் வாங்கியுள்ள கடன் 18 கோடியை மட்டும் திருப்பிக் கொடுத்தால் போதும், இரண்டு வருடங்களாக 18 கோடிக்கு 2% வீதம் கொடுக்க வேண்டிய வட்டி தேவையில்லை என அன்புச் செழியன் விட்டுக் கொடுத்துவிட்டாராம்.

மொத்த கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் சசிக்குமார் தரப்பு வலியுறுத்தி வருவதால் சமரச உடன்பபடிக்கை முடிவுக்கு வராமல் உள்ளதாம்.

இருப்பினும் அன்புச் செழியன் ஒத்துழைப்பில் டிசம்பர் 7 அன்று கொடிவீரன் ரீலீஸ் ஆகியுள்ளது. பேச்சுவார்த்தையில் சசிக்குமாருக்கு நெருக்கமான கனிவான இயக்குநர் ஒருவர் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளதாகச் சொல்கிறார்கள்.

இவரது முன்முயற்சியில் தான் கொடிவீரன் திட்டமிட்டபடிரீலீஸ் ஆனது என்கிறது விநியோக வட்டாரம். இம்மாத இறுதிக்குள் இப் பிரச்சினை சுமுகமாக பேசி முடிக்கப்பட்டு விடும் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

- நமது நிருபர்

English summary
Sources say that Sasikumar - Anbu Chezhiyan have came to a compromise in Ashokumar suicide issue for releasing Kodiveeran smoothly.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil