»   »  மீண்டும் இணையும் சசிகுமார் - லட்சுமிமேனன் ஜோடி?

மீண்டும் இணையும் சசிகுமார் - லட்சுமிமேனன் ஜோடி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சுந்தரபாண்டியன் மூலம் சசிகுமாருடன் ஜோடி சேர்ந்த லட்சுமிமேனன் அடுத்து குட்டிப்புலி படத்திலும் சசியுடன் நடித்தார். இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன. குட்டிப்புலி இயக்கிய முத்தையா தனது அடுத்த படமான கொம்பன் படத்திலும் கார்த்திக்கு லட்சுமிமேனனை ஜோடியாக்கினார். அந்த படமும் ஹிட் ஆனது.

லட்சுமி மேனன் இல்லாமல் முத்தையா இயக்கிய மருது பெரிதாக போகவில்லை. இதேபோல் குட்டிப்புலி படத்துக்கு பிறகு சசிக்கும் எந்தப் படமும் சரியாகப் போகவில்லை. சசிகுமாரும் முத்தையாவும் அடுத்து கொடி வீரன் படத்துக்கு சேரவிருக்கிறார்கள். இந்த படத்தில் தனது ஆஸ்தான நடிகையான லட்சுமிமேனனை ஹீரோயினாக்க திட்டமிட்டுள்ளாராம் முத்தையா.

Sasikumar to join with Lakshmi Menon again?

ஆனால் இதுவரை சசிகுமார் ஓகே சொல்லவில்லை. ராசியான ஜோடி என்பதால் ஓகே சொல்லவே வாய்ப்பு அதிகமாம். அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட கதை என்பதால் தங்கை வேடத்துக்கு பொருத்தமான நடிகையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

English summary
Sasikumar - Lakshmi Menon - Muthaiyah, the Kuttippuli hit combination may rejoin in next Kodi Veeran movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil