»   »  நகைக்கடை துணிக்கடை திறக்க போகல... கழிப்பறை திறந்து வைத்த சசிகுமார்!

நகைக்கடை துணிக்கடை திறக்க போகல... கழிப்பறை திறந்து வைத்த சசிகுமார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அரசு பள்ளி கழிவறையை திறந்து வைத்த சசிகுமார்

கொடைக்கானல் : சசிகுமார் நல்ல நடிகர் என்பதைத் தாண்டி நல்ல மனிதரும் கூட. இவர் தற்போது 'நாடோடிகள் 2' படத்தில் நடித்து வருகிறார். 'நாடோடிகள்', 'போராளி' ஆகிய படங்களில் இணைந்து வெற்றியைக் கொடுத்த சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.

சசிகுமார் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். படத்தை இயக்குவதோடு, தயாரிப்பிலும் சமுத்திரக்கனியே ஈடுபடுகிறார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். நடிகை அதுல்யா இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

Sasikumar opens government school toilet

இந்நிலையில், சசிகுமார் ஒரு பள்ளியில் கழிவறையை திறந்து வைக்கச் சென்றுள்ளார். மேலும், இது தான் நாட்டிற்கு மிக முக்கியமானது என்று சுத்தம் குறித்தும் பேசியுள்ளார். கொடைக்கானல் அருகே வில்பட்டி எனும் ஊரில் இருக்கும் அரசுப் பள்ளியில் கழிவறையைத் திறந்து வைத்துள்ளார் சசிகுமார்.

வில்பட்டி அரசுப் பள்ளியில், சுகாதாரம் குறித்தும், மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் குறித்தும் விளக்கி இருக்கிறார் சசிகுமார். சசிகுமாரின் பேச்சு மாணவர்களை சுகாதாரமாக வாழ்வதில் ஆர்வமூட்டி இருக்கிறது.

சினிமா நட்சத்திரங்கள் என்றாலே, நகைக் கடை, துணிக்கடை போன்றவற்றைத் தான் திறக்கச் செல்வார்கள். லட்சக் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு நகைக்கடை, துணிக்கடை திறப்பு விழாக்களுக்குச் செல்லும் நடிகர் நடிகைகள் மத்தியில் சசிகுமார் செய்த இந்த செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

English summary
Sasikumar is a good man even beyond good actor. Sasikumar has opened the toilet at the government school in Vilpatti near Kodaikanal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil