»   »  பலே வெள்ளையத் தேவா.... இப்படியொரு படம் வருதா என்ன!!

பலே வெள்ளையத் தேவா.... இப்படியொரு படம் வருதா என்ன!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தாரை தப்பட்டைக்கு முன்புவரை மினிமம் கேரன்டி ஹீரோவாக பேசப்பட்ட சசிகுமாருக்கு, அதன் பிறகு வரிசையாக தோல்விப் படங்கள்தான். வெற்றி வேல், கிடாரி போன்ற படங்கள் வந்து சுவடு தெரியாமல் பெட்டிக்குள் முடங்கிய நிலையில்தான், அடுத்து காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து பலே வெள்ளையத் தேவாவை இறக்குகிறார்.

இந்தப் படத்தை அதிக அரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டாலும், கத்தி சண்டை படத்தின் ஆதிக்கத்தால் அது முடியாமல் போய், கிடைத்த அரங்குகளில் வெளியிடுகிறார்கள்.


Sasikumar's Bale Vellaiya Theva from Dec 23

வெள்ளையத் தேவா எந்தத் தேதியில் வெளியாகிறது என்பது தயாரிப்பாளர்களுக்குத் தெரிந்தாலும், படம் பார்க்க வரும் ரசிகர்களுக்குத் தெரிய வேண்டும் அல்லவா... அந்த வகையில் சத்தமே இல்லாமல் வெளியாகிறது படம். இப்படி ஒரு படம் வெளியாகிறது என்பதையே போஸ்டர் அல்லது பேப்பர் பார்த்துத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு!


படத்துக்கு இதுதான் பெரிய மைனஸ். இந்தப் படமும் ஓடாவிட்டால், சசிகுமார் மீண்டும் டைரக்ஷனுக்குத் திரும்ப வேண்டியதுதான் என்கிறார்கள்.

English summary
Sasikumar's Bale Vellaiya Theva is releasing without much hype and publicity this week.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil