»   »  ராஜா சாரின் தலைவாழை இலை பந்தியில் நானும் ஓர் ஓரமாய்!- இயக்குநர் சசிகுமார்

ராஜா சாரின் தலைவாழை இலை பந்தியில் நானும் ஓர் ஓரமாய்!- இயக்குநர் சசிகுமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தலை வாழை இலையில் ஓர் ஓரமா இருக்கிற துவையல் மாதிரி ராஜா சாரோட 1000-வது படமான 'தாரை தப்பட்டை'யில் நானும் இருந்தது சிலிர்ப்பா இருக்கு, என்று நடிகரும் இயக்குநருமான சசிகுமார் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளை நேற்றும் இன்றும் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

Sasikumar's birthday wish to Ilaiyaraaja

அவரது உண்மையான பிறந்த தினம் இன்றுதான் என்பதும், திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளின் முக்கியத்துவம் கருதி அவர் ஒரு நாள் முன்பாகக் கொண்டாடுவதும் அறிந்ததே.

எனவே இன்றும் தொடர்ந்து இளையராஜாவுக்கு வாழ்த்து மழை தொடர்கிறது.

இயக்குநர் சசிகுமார் தனது பேஸ்புக் பக்கத்தில் இளையராஜாவுக்கு தெரிவித்துள்ள வாழ்த்து இது:

"நல்லது கெட்டது எதுவானாலும் ஒவ்வொரு மனுசங்களோட சிநேகிதனா ராஜா சார் இருக்கார். எல்லாத்துக்கும் நாம ராஜா சாரைத்தான் தேடுறோம். ஒவ்வொரு மனசுக்குள்ளேயும் அந்த மனுஷன் கடவுளா மாறி நிற்கிறார். சோகத்தை கழுவுறார். காதலிக்க வைக்கிறார். நம்பிக்கையை உண்டாக்குகிறார். நாடி நரம்புகளில் புகுந்து என்னென்னமோ செய்கிறார்.

சமீபத்தில் ஒரு வாசகம் படிச்சேன். 'ஏ.ஆர்.ரஹ்மான் லாங் டிரைவ் போனால்கூட இளையராஜா பாடலைத்தான் கேட்பார்'னு. நாம சொல்ல முடியாத சிலிர்ப்பை எவ்வளவு குறைவான வார்த்தைகளில் ஒரு ரசிகரோட மனசு சொல்லிடுச்சு.

தலைவாழை இலையில் ஓர் ஓரமா இருக்கிற துவையல் மாதிரி ராஜா சாரோட 1000-வது படமான 'தாரை தப்பட்டை'யில் நானும் இருந்தது சிலிர்ப்பா இருக்கு. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராஜா சார்."

சசிகுமார் தயாரித்த தலைமுறைகள், தாரை தப்பட்டை படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

English summary
Director Sasikumar has conveyed his wishes to Maestro Ilaiyaraaja who celebrated his birthday yesterday.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil