»   »  நான் அரசியல் பேசவில்லை, மனிதம் பேசுகிறேன்! - இயக்குநர் சசிகுமார்

நான் அரசியல் பேசவில்லை, மனிதம் பேசுகிறேன்! - இயக்குநர் சசிகுமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஏழு பேர் விடுதலைக்குப் பிரார்த்தனை செய்வோம் என்று இயக்குநர் சசிகுமார் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தை காரணம் காட்டி அவர்களுக்கான தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.

Sasikumar's prayer for 7 Tamils release

மேலும் அவர்களை விடுதலை செய்வது பற்றி அரசு உரிய முடிவெடுக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமின்றி ஏற்கனவே இவ்வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் சிறையில் இருந்து விடுவிப்பதாக தமிழக அரசு அறிவித்தது.

ஆயுள் தண்டனை காலம் முடிந்த நிலையில் அவர்களை விடுதலை செய்வதாக தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிராக அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

கடந்த டிசம்பரில் வழக்கு விசாரணை முடிவில், ‘இந்த வழக்கில் உள்ளவர்களை விடுதலை செய்வது குறித்த அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. மத்திய அரசுக்குத்தான் உள்ளது' என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்த விவகாரத்தில் 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு மற்றொரு முயற்சியை இப்போது மேற்கொண்டு உள்ளது. பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிப்பது குறித்து கருத்துக் கேட்டு தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், மத்திய உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி உள்ளிட்ட 7 பேர் 24 ஆண்டுகளாக சிறையில் இருப்பதாகவும், அவர்களை விடுப்பதில் மத்திய அரசு கருத்தை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவர் கருணாநிதி உட்பட பலரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

இயக்குநரும் நடிகருமான சசிகுமாரும் இதை வரவேற்றுள்ளார். அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், 'ஏழு தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு கடிதம், எல்லோரும் பிரார்த்தனை செய்வோம் என்றும், 7 பேர் விடுதலை விவகாரம்... நான் அரசியல் பேசவில்லை. மனிதம் பேசுகிறேன்,' என்றும் எழுதியுள்ளார்.

English summary
Director Sasikumar urged people to pray for the release of 7 Tamils including Perarivalan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos