»   »  8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சசிகுமார்–சமுத்திரக்கனி

8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சசிகுமார்–சமுத்திரக்கனி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சுப்பிரமணியபுரம், நாடோடிகள், போராளி போன்ற படங்களுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார்கள் சமுத்திரக்கனியும் சசிகுமாரும்.

சசிகுமார்- சமுத்திரக்கனி இணைந்து நடித்த ‘சுப்பிரமணியபுரம்' மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. 2008-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை கதாநாயகனாக நடித்த சசிகுமார் இயக்கினார். இதில் அவருடன் சமுத்திரக்கனி மெயின் வில்லனாக நடித்தார். பின்னர் 'நாடோடிகள்' படத்திலும் இருவரும் இணைந்து பணிபுரிந்தார்கள்.

Sasikumar - Samuthirakkani join hands after 8 years

அடுத்து சசிகுமார் நடித்த ‘ஈசன்' படத்தை சமுத்திரக்கனி இயக்கினார். இருவரும் ஒன்றாக நடிக்கவில்லை. இதிலும் சமுத்திரக்கனி, சசிகுமாருடன் சேர்ந்து திரையில் முகம் காட்டவில்லை.

அடுத்து போராளி படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்க, சமுத்திரக்கனி இயக்கினார்.

இப்போது 8 வருடங்களுக்கு பிறகு சசிகுமாரும், சமுத்திரக்கனியும் ஒரு புதிய படத்தில் சேர்ந்து நடிக்கிறார்கள். ‘வெற்றிவேல்' என்ற பெயரில் தயாராகும் இந்த படத்தை வசந்தமணி இயக்குகிறார். சசிகுமாரும், சமுத்திரக்கனியும் நடிக்கும் இந்த படத்தில் மியா ஜார்ஜ் கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் தம்பி ராமையா, ரேணுகா ஆகியோர் நடிக்கிறார்கள். பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்

English summary
Directors Sasikumar and Samuthirakkani have joined together after a gap of 8 long years in Vetrivel movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil