»   »  உத்தா பஞ்சாப் குழுவினரின் சென்சாருக்கு எதிரான வெற்றி நம் அனைவருக்கும் பொதுவானது - சசிக்குமார்

உத்தா பஞ்சாப் குழுவினரின் சென்சாருக்கு எதிரான வெற்றி நம் அனைவருக்கும் பொதுவானது - சசிக்குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ''சென்சாருக்கு எதிரான உத்தா பஞ்சாப் குழுவினரின் வெற்றி நம் அனைவருக்கும் பொதுவானது'' என நடிகர் சசிக்குமார் கூறியிருக்கிறார்.

பாலிவுட் படமான உத்தா பஞ்சாப் தணிக்கையில் 89 இடங்களில் வெட்டுப்பட கோபமடைந்த படத்தின் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே 13 வெட்டுகளுடன் தணிக்கைக் குழுவினர் இப்படத்துக்கு ஏ சான்றிதழ் அளித்தனர்.

Sasikumar Wished Udta Punjab Movie Crew

ஆனால் இன்னும் பழைய பாட்டியாக இல்லாமல் காலத்திற்கு ஏற்றவாறு மாறுங்கள் என்று சென்சாருக்கு அறிவுரை கூறிய உயர் நீதிமன்றம் இப்படத்தின் ஒரு காட்சியை மட்டும் நீக்குமாறு தீர்ப்புக் கூறியது.

இதனால் உத்தா பஞ்சாப் படக்குழுவுக்கு நாடு முழுவதும் உள்ள படைப்பாளிகள் தங்கள் வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர். இந்த வரிசையில் நடிகர் சசிக்குமாரும் இணைந்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் ''அனுராக் காஷ்யப்! தணிக்கை வாரியத்துக்கு எதிரான உங்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி உங்களுடையது மட்டுமல்ல, எங்களுடையதும் தான்'' என்று தெரிவித்திருக்கிறார்.

சசிக்குமார் நடித்து வரும் கிடாரி படத்தின் 3 வது கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

English summary
''anuragkashyap Your victory in the battle against CBFC is not yours alone.. ours, too'' Sasikumar Wished Udta Punjab Movie Crew.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil