»   »  பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயிக்கப் போவது யார், காரணம் என்ன?: சொல்கிறார் சதீஷ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயிக்கப் போவது யார், காரணம் என்ன?: சொல்கிறார் சதீஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயிக்கப் போவது யார் என்று நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியான பிக் பாஸ் மக்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது. கமல் சின்னத்திரைக்கு வருகிறார் என்று மகிழ்ந்த அவரின் ரசிகர்களோ தற்போது ஆண்டவரே இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுங்கள் என்று கெஞ்சுகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் எதற்கெடுத்தாலும் ஜூலியானாவை தான் குறி வைக்கிறார்கள்.

ஜூலி

ஜூலி

பலர் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க ஜூலி தான் காரணம். முதலில் ஜூலி மீது பரிதாபப்பட்ட மக்கள் அவரின் உண்மை முகம் என்று கூறி வெளியான வீடியோவை பார்த்துவிட்டு கடுப்பாகிவிட்டனர்.

ஆர்த்தி

ஆர்த்தி

குண்டு ஆர்த்தியும், காயத்ரி ரகுராமும் எதற்கெடுத்தாலும் ஜூலியை கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள். ஆர்த்தி நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஜூலியுடன் மோதுகிறார்.

கோபம்

கோபம்

ஆர்த்தியும், காயத்ரி ரகுராமும் நடந்து கொள்ளும் விதம் ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி தான் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று பலரும் கணித்துள்ளனர்.

சதீஷ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறப் போவது ஜூலி தான். காரணம் ஆர்த்தி மற்றும் காயத்ரி என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நகைச்சுவை நடிகர் சதீஷ்.

English summary
Comedian Satheesh has tweeted that,'#BiggBoss Julie dhan winner. Reason Aarthy and Gayatri.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil