»   »  எவ்வளவு பெரிய ஸ்டார் விஜய், ஆனால் அவரோ...: சதிஷ்

எவ்வளவு பெரிய ஸ்டார் விஜய், ஆனால் அவரோ...: சதிஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் பெரிய ஸ்டாராக இருந்தாலும் தன்னை ஒரு நண்பன் போன்று நடத்துவதாக நகைச்சுவை நடிகர் சதிஷ் தெரிவித்துள்ளார்.

பரதன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், சதிஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் பைரவா. இந்த பொங்கல் விஜய் ரசிகர்களுக்கு தளபதி பொங்கல். பைரவா படத்தில் விஜய்க்கு என பிரத்யேகமாக ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என செய்திகள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில் படம் குறித்து சதிஷ் பிரபல இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.


விஜய்

விஜய்

விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் ரசிகர்களின் படைபலம் உள்ள பெரிய ஸ்டாராக இருந்தாலும் என்னை தன் நண்பன் போன்று நடத்துவார்.


பைரவா

பைரவா

கத்தி படத்திலும் நான் விஜய்யுடன் நடித்தேன். ஆனால் அந்த படத்தை விட பைரவாவில் காமெடிக்கு நிறைய ஸ்கோப் உள்ளது. மாஸ், சென்டிமென்ட், காமெடி என பைரவா அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் என்கிறார் சதிஷ்.


கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

விஜய்யுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அவர் விஜய்யுடன் டான்ஸ் ஆட பயப்படுகிறாரே தவிர அவருடன் நடிக்க பயப்படவில்லை. காரணம் விஜய் பெரிய நடிகராக இருந்தாலும் செட்டில் சாதாரணமாக இருப்பது தான் என கீர்த்தி தெரிவித்துள்ளார்.


வெளிநாடு

வெளிநாடு

பைரவா படத்தில் வரும் பாடலை காட்சியாக்குவதற்காக படக்குழு சுவிட்சர்லாந்து சென்றுள்ளது. படத்தில் விஜய் மாஸாக கொடுத்துள்ள போஸ்கள் அடங்கிய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.


English summary
Comedian Sathish said that Vijay inspite of being a big star treats him like a friend.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil