»   »  ஹாயா படுத்துக்கிட்டு 'கேன்டி கிரஷ்' விளையாடிய இயக்குனரை தயாரிப்பாளரிடம் மாட்டிவிட்ட சதீஷ்

ஹாயா படுத்துக்கிட்டு 'கேன்டி கிரஷ்' விளையாடிய இயக்குனரை தயாரிப்பாளரிடம் மாட்டிவிட்ட சதீஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
வரும் 15ம் தேதி நடக்கும் விழாவில் விஜய் சேதுபதி, கோபி நயினாருக்கு விருது வழங்கப்பட உள்ளது

சென்னை: தயாரிப்பாளரிடம் தன்னை மாட்டிவிட்ட இயக்குனர் அமுதன் பற்றி போட்டுக் கொடுத்துள்ளார் நடிகர் சதீஷ்.

அகில உலக சூப்பர் ஸ்டார், நடனப் புயல் சிவா, சதீஷ் உள்ளிட்டோரை வைத்து சி.எஸ். அமுதன் தமிழ் படம் 2.0-ஐ இயக்கி வருகிறார். தமிழக அரசில் உள்ள பெரிய ஆளை கலாய்த்து பட போஸ்டர் வந்தவுடனேயே ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது.

இன்னும் யார், யாரை எல்லாம் கலாய்த்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. படம் சீக்கிரம் வந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ட்வீட்டிய சதீஷை அமுதன் ட்விட்டரில் கலாய்த்தார். டேய் தயாரிப்பாளரே இதுக்கு தான் ஆர்.ஜே. பாலாஜியை போடலான்னு சொன்னேன் என்றார்.

இயக்குனர்

ஹலோ மிஸ்டர் தயாரிப்பாளர், நான் என்னமோ ஷாட்டுக்கு 5 நிமிடம் லேட்டா வந்ததுக்கு நேத்து அவ்ளோ பேசினீங்களே...இப்போ நாங்க எல்லாம் ரெடி. ஆனால் நம்ம இயக்குனர் அமுதன் பண்ற வேலையை பாருங்க என்று போட்டுக் கொடுத்துள்ளார் சதீஷ்.

போட்டோ

இதே மாதிரி சதீஷ் கேரவன்ல படுத்துக்கிட்டிருந்த போட்டோ என் கிட்ட இருக்கு. ஆனால் அவர் கூட இருந்தவங்க போட வேண்டாம்னு ரெக்வெஸ்ட் பண்ணினாங்க என அமுதன் பதிலுக்கு ட்வீட்டியுள்ளார்.

ரசிகர்கள்

சதீஷ் அப்படி யாருடன் படுத்திருந்தார் என்று ரசிகர்கள் வியந்து கொண்டிருந்தபோதே சதீஷ் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். உடனிருப்பது விஷால்.

English summary
Actor Sathish has exposed director CS Amudhan who was busy playing candy crush in his cellphone in the caravan. CS Amudhan is directing Thamizh Padam 2.0 with Siva.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X